என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறுகிறது.
- திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகளை கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் வல்லம் சாலையில் நாளை 3-ந்தேதி (வியாழக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மாலை 1 மணி வரை நடை பெற உள்ளது.
எனவே வல்லம், மின் நகர், செங்கிப்பட்டி, வீரமர சன்பேட்டை, கள்ளப்பெ ரம்பூர், திருக்கானூர் பட்டி, வடக்கு தஞ்சாவூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகள் ஏதும் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கலை வேந்தன் தெரிவித்துள்ளார்.
Next Story






