விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூரில் நாளை நடக்கிறது கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அழைப்பு
விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
Published on

வேலுார்:

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (25-ந் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகிக்கிறார்.

வேளாண், பொறியியல், மின்வாரியம், ஆவின், கூட்டுறவு சங்கங்கள், போக்குவரத்து உட்பட எல்லாதுறை அலுவலர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

எனவே, விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com