மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் - நாளை நடக்கிறது

திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.20-ந்தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூா்

திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- திருப்பூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாளை புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு திருப்பூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமை வகித்து மின்நுகா்வோரிடமிருந்து குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்யவுள்ளாா்.கூட்டத்தில், மின் நுகா்வோா் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com