search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt"

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் பல்வேறு பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து, திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் கருவிகள் வைப்பு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின்போது முகாமிற்கு தேவையான கருவிகள் உள்ளனவா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக எடுத்துரைத்து நிவர்த்தி செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    ஆய்வு

    மேலும், சட்டையம்புதூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு மாதிரி முகாம் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு முகாமில் அமைக்கப்பட்டுள்ள தன்னார்வலர் உதவி மையம், விண்ணப்ப பதிவு மையம், விண்ணப்ப பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பணிகள், விண்ணப்ப பதிவு நடைமுறைகள், பொதுமக்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் ஆகியவைகள் குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

    அடிப்படை வசதிகள்

    இந்த ஆய்வின் போது பொதுமக்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    மேலும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளையும் உறுதி செய்து கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    பின்னர் திருச்செங்கோடு நகராட்சியில் சூரியம்பாளையம் நியாய விலை கடை, ராஜா கவுண்டம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆண்டிப்பாளையம், அணிமூர் கிராம ஊராட்சி சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்கள்.

    மேலும் திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இரண்டு இ - சேவை மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மையத்தில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .செல்வகுமரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, இ-சேவை மாவட்ட மேலாளர் சுந்தரராஜ், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் .ஜெயராமராஜா, தாசில்தார் பச்சமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், .கஜேந்திரபூபதி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரம் நடராஜன் கோவிலில் அரசு தலையிட்டது ஏன்? என மதுரையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
    • அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத்துறைக்கு உண்டு.

    மதுரை

    மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தை யும், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புனர மைக்கப்பட்ட சிறுவர் பூங்கா வையும் பயன் பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

    அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலை யத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் கோவில் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விைரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஒரு மாதத்தில் ராஜ கோபுரத்திற்கும், அடுத்த 2 மாதத்தில் கள்ளழகருக்கும் குடமுழுக்கு நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 764 கோவில்களில் 501 கோவில்களுக்கு மத்திய அரசின் தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. சுவாமிமலை கோவில், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவி லுக்கு ரோப்கார் ஆகியவற்றிற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 812 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது.எனவே இந்த ஆட்சியை "குட முழுக்கின் உற்சவ ஆட்சி" என சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

    கடந்த ஆண்டு மேற்கொண்ட குடமுழுக்கு உள்ளிட்ட திருப்பணிகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கூடுதலாக தொடர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்ட பத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறை வடையும்.

    அதனை தொடர்ந்து கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தும் பணிகள் நடைபெறும். அழகர் மலையில் சாலை அமைக்கும் பணிகளுக்காக வனத்துறை யின் அனுமதி பெறப்பட்டு ஓரிரு நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் - பக்தர் உறவு சமூகமாக இல்லா விட்டால் அதை கேட்கும் உரிமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு. பக்தர்கள், இறைவனுக்கு அடுத்த படியாக கருதுவது தீட்சிதர்களையும், அர்ச்ச கர்களையும் தான். அதை மதித்து பக்தர்களை கவுரவிக்க வேண்டிய பொறுப்பு தீட்சி தர்களுக்கு உண்டு. அப்படிபக்தர்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால் அங்கு அரசு தலையிடும். கோவிலில் சட்டமீறல் இருந்தால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் அதைக்கேட்கும் அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத் துறைக்கு உண்டு.

    உயர்நீதிமன்ற ஆணையை தீட்சிதர்கள் மீறியதால் தான் அரசு அதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசின் ஆணையை மீறியஅர்ச்சகர்களின் நடவடிக்கையை உடைத்து எறிந்து பக்தர்கன் கனகசபை மீது ஏறி நான்காவது நாள் தரிசனம் செய்தார்கள். இதை ஒரு போட்டியாக கருதவில்லை.

    பக்தர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தெய்வத்திற்கு பணிவிடை செய்யும் தீட்சிதர்களுக்கு உண்டு. நேர்மையாக, மனசாட்சி யுடன் நடந்து கொள்ள வேண்டும். தனியார் வசம் சொத்துக்கள் இருந்த போது கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. அதன் காரணமாகத்தான் அறநிலைய துறை வசம் கொண்டு வரப்பட்டன. அரசிடம் உள்ள வரை தான்கள்சொத்துக்கள், பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்க் அனைவருக்கும் பாதுகாப்பு என என்பதை உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தி.மு.க. பொருளாளர் சுந்தரபாண்டியன், இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டி, கவுன்சிலர் காளிதாஸ் உள்பட பலர் உள்ளனர்.

    • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக் காக கடந்த 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது.
    • சேலம் மாவட் டத்தில் 3 லட்சம் விவசாயி கள் பயன்பெற்று வருவதை போல் இ-ஷ்ரம் திட்டத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்புச்சாரா தொழிலா ளர்கள் பலர் சேர்ந்துள்ளனர்.

    சேலம்:

    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக் காக கடந்த 2021-ம் ஆண்டு இ-ஷ்ரம் திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகம் செய்தது.

    இதில் கட்டுமான தொழி லாளர்கள், தெருவோர வியாபாரிகள், வேளாண் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களை ஆதாருடன் இணைப்பதற்கு தேசிய அளவிலான தர வுத்தளம் உருவாக்கப்பட்டுள் ளது.

    ஆதார் தொடர்பான தகவல்கள், சொந்த விவ ரங்கள், தொடர்பு விவ ரங்கள், முகவரி தகவல், தொழில் விவரங்கள், வங்கி விவரங்கள், வாரிசாக நியமிக்கப்படுபவரின் விவரங்கள் உள்ளிட்டவை இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படு வதன் மூலம் மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங் களை கொண்டு சேர்ப்பதில் உதவிகரமாக உள்ளது.

    சேலம், நாமக்கல்..

    குறிப்பாக, மத்திய அரசு விவசாயிகளுக்கு வருடத் திற்கு ரூ. 6 வழங்கி வரும் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டத் தில் மட்டும் சேலம் மாவட் டத்தில் 3 லட்சம் விவசாயி கள் பயன்பெற்று வருவதை போல் இ-ஷ்ரம் திட்டத்தில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அமைப்புச்சாரா தொழிலா ளர்கள் பலர் சேர்ந்துள்ள னர்.

    சேலம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இ-ஷ்ரம் திட்டத்தில் இணைந்துள்ளனர். இது குறித்து மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை மந்தரி பூபேந்தர் யாதவ் கூறியதாவது:-

    நாட்டில் தற்போது தொழிலாளர் சட்டங்கள் மாற்றப்பட்டு, சீர்திருத்தப் பட்டு, எளிமையாக்கப்படு வதாகத் தெரிவித்தார். அந்தவகையில், 29 வகை யான தொழிலாளர் சட்டங்கள், 4 எளிதான தொழிலாளர் சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச கூலி, பணிப் பாதுகாப்பு, சமூகப் பாது காப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வாயிலாக தொழிலாளர்களின் அதிகா ரமளித்தல் உறுதி செய்யும்.

    28.93 கோடி தொழிலாளர்கள்

    இ-ஷ்ரம் இணைய தளத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழில்பிரிவு களில் ஈடுபட்டுள்ள 28.93 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்கள், பதிவு செய்துள்ளனர். மேலும் பல தொழில் பிரிவுகள் இதில் சேர்க்கப்படும்.

    தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் மூலம் பல்வேறு வகையான வேலைவாய்ப்புத் தொடர்பான சேவைகள் அளிக்கப்படுகின்றன.

    இதன் மூலம் 1.39 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக் கான உதவிகள் அளிக்ப் பட்டுள்ளன. தேசிய வேலை வாய்ப்பு இணையதளம் இ-ஷ்ரம், உத்யம், திறன் இந்தியா ஆகிய இணைய தளங்களுடன் இணைக்கப் பட்டுள்ளது.

    தொழிலாளர் கொள்கை யில் சீர்தி ருத்தங்கள் செய்யப்பட்டதன் காரண மாக கடந்த 9 ஆண்டுகளில் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.) தொழிலா ளர்கள் எளிதாக பணம் எடுக்கும் முறை, ஓய்வூதிய தாரர்கள் எளிதாக வாழ் நாள் சான்றிதழ் பெறும் முறை மற்றும் பென்சன் உயர்வு உள்ளிட்டவை காரணமாக பயனடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.
    • சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கிச்சிப்பாளையம் புதுதெரு பகுதியை சேர்ந்தவர் சாலை சேகரன் (வயது 49). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.

    மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தனக்கு நண்பர் என்றும், அவர் மூலம் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் ராதாகிருஷ்ணன் என்பவரையும் போனில் பேச வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சாலை சேகரன், அந்த நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிலும், கூகுள்பே மூலமும் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 273 செலுத்தியுள்ளார்.

    அதன் பிறகு அந்த 2 நபர்களும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாலை சேகரன், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 2 புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் நகர தி.மு.க சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், பஞ்சுகுமார், நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,

    சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம், புதிய நூலக கட்டிடம், உதவி கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதே போல் தொகுதி முழுவதும் வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள்கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    கொள்ளிட ஆற்றுக் கரையில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே அரசு தி.மு.க அரசு தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுவாமிநாதன், நகர நிர்வாகிகள் பந்தல்முத்து, பாஸ்கரன், சங்கர், செல்வமுத்துக்குமார், சரவணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக், பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் கவுதமன் நன்றி கூறினார்.

    • சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
    • அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதிக்கு ஆத்தூரிலிருந்து தலைவாசலுக்கு சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

    அப்பொழுது மணி விழுந்தான் என்னும் இடத்தில் அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் எதுவும் இல்லாமல் சாலையின் ஓரமாக பேருந்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பேருந்தில் பயணிகள் அனைவரும் கீழே இ அந்த பேருந்தில் டயர் மாற்றுவதற்கான ஸ்டெப்னி டயர் இல்லாததால் மாற்று பேருந்து 31 -ம் நம்பர் பேருந்து வரவழைக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெப்னி டயரை பயன்படுத்தினார்கள். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தின் ஏற்றி தலைவாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பேருந்தில் ஸ்டெபி டயர் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரமாக சாலையிலேயே பயணிகள் அனைவரும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

    • எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.
    • தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மகுடஞ்சா வடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னந்தேரி ஊராட்சி கோசாரிப்பட்டி காட்டு வளவில் வசித்து வந்த மாது மகன் மணி கண்டன்(வயது20). கல்லூரி மாணவரான இவர் எடப்பாடி அருகே கல்வ டங்கம் காவிரி ஆற்றில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூழ்கி உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அரசு உத்தரவிட்டது. இதை யடுத்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை சங்ககிரி கோட்டாட்சியர் (பொறுப்பு) தணிகாசலம் அந்த மாண வன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தி னரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சங்ககிரி தாசில்தார் பானுமதி, எர்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், கன்னந்தேரி கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவ லர்களும், மகுடஞ்சாவடி ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் மூலம் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
    • இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன.

    சேலம்:

    மக்களுக்கு குறைவான விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதை நோக்க மாகக் கொண்டு, நாடு முழுவ தும் மக்கள் நல மருந்தகங்கள் எனும் மலிவு விலை மருந்தகங்களை மத்திய அரசு திறந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசால் திறக்கப்பட்டுள்ள 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்த கங்கள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.இந்த மருந்தகங்களில் கிடைக்கும் 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் பிரபல நிறுவனங்க ளின் விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவாக இருக்கின்றன. குறைவான விலையில் மருந்து கிடைப்பதால், அதிக விலையுடைய மருந்துகளை வாங்கும் நெருக்கடியில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

    சேலத்தில்...

    தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவையில் 56, ஈரோட்டில் 29, சேலத்தில் 27, திருப்பூரில் 13, நாமக்கல்- 13, மக்கள் நல மருந்த கங்கள் செயல்படுகின்றன.

    இந்த நிலையில் மத்திய அரசு இவற்றின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவ தும் மக்கள் மருந்த கங்களின் எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது.

    • கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பினாலும் 5-வது நாளாக கர்நாடக பஸ்கள் கொளத்தூர் அருகே உள்ள தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு சோதனைச்சாவடி வழியாக இயக்கப்படவில்லை.

    • அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு தினமும் அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பஸ்களும் பெரும் அளவில் இயக்கப் பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கால அட்டவணையை பின்பற்றா மல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவதாக தனியார் பஸ் டிரைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. அந்த பஸ் வழக்கம்போல் சென்னிமலை பஸ் நிலை யத்துக்கு வந்தது. அந்த பஸ் கண்டக்டர் அங்கு பயணி களை ஏற்றி கொண்டிருந்தார்.

    அப்போது அதே நேர த்தில் சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது.

    இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தனியார் பஸ்சை வழிமறித்து ஏன் முன் கூட்டியே செல்கிறீர்கள் என டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ் டிரைவரிடம் நீங்கள் தான் ஒவ்வொரு முறையும் காலை, மாலையில் முன்கூட்டியே செல்கிறீர்கள் என்றும், உங்கள் பஸ்சின் கால அட்டவணையை கொடுங்கள் என்றும் கேட்டனர்.

    இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இரு பஸ்களிலும் இருந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 2 பஸ்களும் 15 நிமிடங்கள் தாமதமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    இதுபோன்ற நேர பிரச்சனை காரணமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் அடிக்கடி அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே மோதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    • திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.
    • இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர்.

    நாமக்கல்:

    ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் பேப்பர் மில், காவேரி ஆர்.எஸ், ஆயக்காட்டூர் கார்னர், ஓட பள்ளி, கொக்கராயன் பேட்டை வழியே அரசு டவுன் பஸ் திருச்செங்கோடு வரை செல்கிறது. இந்த பஸ்சில் திருச்செங்கோடு செல்வதற்காக காவேரி ஆர்.எஸ். பஸ் ஸ்டாப்பில் இருந்து நேற்று பெண் பயணிகள் ஏறினர்.

    பேப்பர் மில் காலனி ரோட்டில் செல்லாமல் ஓட பள்ளி ரோட்டில் பஸ் சென்றது. இதனை கவனித்த திருச்செங்கோடு செல்லும் பெண்கள் சிலர், பஸ் வேறு பாதையில் செல்வதால், பஸ்சை நிறுத்துமாறு சத்தமிட்டனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் கண்டக்டரை திட்டினார்.

    அப்போது அந்த பெண்கள், நாங்கள் திருச்செங்கோடு செல்ல வேண்டும், ஆனால் பஸ் நேராக செல்கிறது என்றனர். இதை அடுத்து அந்த பெண் பயணிகளை திட்டியபடியே டிரைவரும், கண்டக்டரும் நடுவழியில் பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசு பெண்களுக்காக இலவச பஸ்களை இயக்குகிறது. ஆனால் சில கண்டக்டர்கள் அவர்களை மதிக்காமல் நடுவழியில் கீழே இறக்கி விடுவது வேதனையாக இருப்பதாக பெண் பயணிகள் தெரிவித்தனர்.

    • அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர்.

    இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்ளைகை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், ஒரு பயனாளிக்கு ரூ.8,500 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.14,000 மதிப்புடைய தக்க செயலிகளுடன் கூடிய கைப்பேசியும், கலெக்டர் வழங்கினார்.

    மேலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, முதற்கட்டமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் 'பாதுகாப்பு பெட்டி" அமைக்கும் வகையில், கலெக்டர் அறிமுகப்படுத்தினார். பெண்கள் தங்கள் மீதான பாலியல் புகார்களை இப்பெட்டியில் போடலாம்.

    இக்கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், சித்த மருத்துவ அலுவலர் மரு.காமராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×