search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பெட்டி
    X

    அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பெட்டி

    • அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர்.

    இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்ளைகை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், ஒரு பயனாளிக்கு ரூ.8,500 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.14,000 மதிப்புடைய தக்க செயலிகளுடன் கூடிய கைப்பேசியும், கலெக்டர் வழங்கினார்.

    மேலும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, முதற்கட்டமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் 'பாதுகாப்பு பெட்டி" அமைக்கும் வகையில், கலெக்டர் அறிமுகப்படுத்தினார். பெண்கள் தங்கள் மீதான பாலியல் புகார்களை இப்பெட்டியில் போடலாம்.

    இக்கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், சித்த மருத்துவ அலுவலர் மரு.காமராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×