search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரைவர்கள் வாக்குவாதம்"

    • அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு தினமும் அரசு நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பஸ்களும் பெரும் அளவில் இயக்கப் பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கால அட்டவணையை பின்பற்றா மல் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவதாக தனியார் பஸ் டிரைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. அந்த பஸ் வழக்கம்போல் சென்னிமலை பஸ் நிலை யத்துக்கு வந்தது. அந்த பஸ் கண்டக்டர் அங்கு பயணி களை ஏற்றி கொண்டிருந்தார்.

    அப்போது அதே நேர த்தில் சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது.

    இதையடுத்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தனியார் பஸ்சை வழிமறித்து ஏன் முன் கூட்டியே செல்கிறீர்கள் என டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ் டிரைவரிடம் நீங்கள் தான் ஒவ்வொரு முறையும் காலை, மாலையில் முன்கூட்டியே செல்கிறீர்கள் என்றும், உங்கள் பஸ்சின் கால அட்டவணையை கொடுங்கள் என்றும் கேட்டனர்.

    இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இடையே இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இரு பஸ்களிலும் இருந்த பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வாக்குவாதத்தை வேடிக்கை பார்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் விரைந்து வந்து அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 2 பஸ்களும் 15 நிமிடங்கள் தாமதமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    இதுபோன்ற நேர பிரச்சனை காரணமாக சென்னிமலை பஸ் நிலையத்தில் அடிக்கடி அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே மோதல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    • போக்குவரத்து நெரிசல்
    • போலீசார் எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரின்சர்க்கிளில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது.

    தினந்தோறும் இந்த நெரிசல் வாடிக்கையாகி விட்டபோதிலும் வாகன ஓட்டிகள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு கிரீன் சர்க்கிளை கடந்து வருகின்றனர்.இன்று காலை வேலூர் கிரின் சர்க்கிளில் சென்னையிலிருந்து வேலூருக்கு வந்த அரசு பஸ் ஒன்றை டிஜிட்டல் பேனர் கம்பிகள் ஏற்றி வந்த மினிலாரி முந்தி செல்ல முயன்றது‌. அப்போது பஸ் மீது பேனர் கம்பிகள் உரசின.

    இதனால் பஸ் அங்கே நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து அணிவகுத்து நின்றன. இதனால் அந்த வாகனங்கள் முன்னும் பின்னும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனத்தை சீர் செய்யாமல் 2 வாகன டிரைவர்களும் கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் மேலும் நெரிசல் அதிகமானது. அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 2 டிரைவர் களையும் கடுமையாக எச்சரித்து பஸ் மற்றும் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போக்குவரத்து சீரானது.

    ×