அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7.55 லட்சம் மோசடி

கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார். சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.7.55 லட்சம் மோசடி
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் கிச்சிப்பாளையம் புதுதெரு பகுதியை சேர்ந்தவர் சாலை சேகரன் (வயது 49). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.

மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தனக்கு நண்பர் என்றும், அவர் மூலம் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ராதாகிருஷ்ணன் என்பவரையும் போனில் பேச வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சாலை சேகரன், அந்த நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிலும், கூகுள்பே மூலமும் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 273 செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு அந்த 2 நபர்களும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாலை சேகரன், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com