search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheat"

    • பூமிக்கடியில் புதையல் இருப்பதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் சுதாகரிடம் கூறியுள்ளனர்.
    • தம்பதியினர் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). இவர் அதே பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் குடியா (35) மற்றும் பீம் (42). இவர்கள் தற்போது கோவையில் வசித்து வருகிறார்கள். 2 பேரும் சுதாகரின் கடைக்கு தினமும் பழஜூஸ் குடிக்க வருவது வழக்கம்.

    இவர்கள் தங்கள் ஊரில் பூமிக்கடியில் புதையல் இருப்பதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் அவரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய சுதாகர் மற்றும் அவரது மனைவி ரூ.25 ஆயிரத்தை அவர்களிடம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    சம்பவத்தன்று ஒப்பணக்கார வீதியில் உள்ள கோவிலுக்கு வந்து நகைகளை பார்க்க வருமாறு பீம் அழைத்துள்ளார். இதையடுத்து தம்பதியினர் கோவிலுக்கு பணத்துடன் சென்றனர். ஆனால் குடியா , பீம் 2 பேரும் நகைகளை காட்டாமல் பணத்தை நைசாக திருடி செல்ல முயன்றனர்.

    உடனே சுதாரித்து கொண்ட தம்பதியினர் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.
    • சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கிச்சிப்பாளையம் புதுதெரு பகுதியை சேர்ந்தவர் சாலை சேகரன் (வயது 49). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் தொடர்பு கொண்ட காதர் நூருல்லா என்ற நபர், தான் இடியாப்பம் தயாரிக்கும் எந்திரம் செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருவதாக அறிமுகம் ஆகி உள்ளார்.

    மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தனக்கு நண்பர் என்றும், அவர் மூலம் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் ராதாகிருஷ்ணன் என்பவரையும் போனில் பேச வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சாலை சேகரன், அந்த நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிலும், கூகுள்பே மூலமும் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 273 செலுத்தியுள்ளார்.

    அதன் பிறகு அந்த 2 நபர்களும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாலை சேகரன், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
    • பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பொருளா தார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் புல்லியன் பின் டெக் நிறுவனத்தின் சார்பில் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிலையில் பணம் பெற்றவர்களிடம் முதிர்வு தொகையை வழங்காமல் ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.

    கற்பகவல்லி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நிதி நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் ஆனந்தன், நீதிமணி, மேனகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

    அதே போல் ராமநாதபுரம் மாவட்டம், முத்துபுரம், அக்ரஹாரம் என்ற முகவரியில் செயல்பட்டு வந்த வி.கே.எல்.டயரீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வாசுகிநாதன், கார்த்திக் கணேஷ், காஜா முகைதீன் ஆகிய நபர்கள் சேர்ந்து பரமக்குடி மற்றும் அந்தப்பகுதியைச் சுற்றி பொதுமக்களை சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் அதற்கான முதிர்வுத்தொகையை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மோசடி செய்து ஏமாற்றி வருவதாக சண்முகசுந்தரம், என்பவர் புகார் செய்துள்ளார்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் ராமநாதபுரம் நேருநகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் தங்கள் புகார்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகள்-பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
    • 24 மணி நேரமும் பயணிகளிடம் வசூல் வேட்டை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகரில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிலர் பணமோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வரும் பயணிகளிடம் "காப்பகம் நடத்துகிறோம். நன்கொடை வழங்குங்கள்" என்று 24 மணி நேரமும் பயணிகளிடம் வசூல் வேட்டை நடக்கிறது.

    மேலும் சிலர் மாற்றுத்திறனாளிகள் என்று தெரிவித்தும் பஸ்களில் ஏறி மக்கள் மத்தியில் பேசி வசூல் செய்கின்றனர். இதில் பலர் மோசடி நபர்கள் என்றும், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல் ரெயில் நிலையம் மற்றும் மீனாட்சி கோவில் வரும் மக்களிடம் "நாங்கள் காப்பகத்தில் இருந்து வருகிறோம்" என்று தெரிவித்து சில பெண்கள் நன்கொடை வசூலித்து செல்கின்றனர்.

    இவர்கள் அடிக்கடி மதுரையில் முகாமிட்டு வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் பின்னணியில் மோசடி நபர்கள் இருப்பதுபோல் தெரிகிறது. இவர்கள் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது. இருந்த போதிலும் பலர் அவர்களிடம் பணம் கொடுத்து வருகின்றனர்.

    இவர்கள் உண்மையை தெரிவித்து வசூல் செய்தார் களா ? அல்லது போலி நபர்களா? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முன்வருவார்களா?

    • ஆன்லைன் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
    • அதன்பேரில் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை

    மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    சென்னை வில்லிவாக்கம் பாலிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த முகமது ஜாபர் என்பவர் ராமநாத புரம் முத்துபுரம் அக்ரகாரம் என்ற முகவரியிலும், ராமநாதபுரம் பாரதிநகர் அருள்நகர் நீலாவதி காம்ப்ளக்ஸ் என்ற முகவரியிலும் "வாகூ நெட் பிரைவேட் லிமிடெட்" என்ற நிதிநிறுவனத்தை ஆன்லைன் மூலம் தொடங்கினார்.

    ஆன்லைன் ரியல் எஸ்டேட், ஆன்லைன் அட்வர்டைசிங் புரோகிராம், ஆன்லைன் ஜாப் ஒர்க் போன்ற ஆன்லைன் பிசினஸ் மூலம் பகுதி நேர வேலை தருவதாகவும், இந்த நிறுவனத்தின் கிளைகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநில ங்களில் மொத்தம் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருவதாவும் கூறி தொலைகாட்சி மூலம் விளம்பரம் செய்தார்.

    அதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு ஆன்லைனில் தருவதுடன் அவர்களின் பணத்தை தொழில்களில் முதலீடு செய்தால் அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து 6 மாதத்தில் 3 மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தார்.

    அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு ராமநாதபுரம் செல்வகுமார் நீதிமன்றத்தில் கொடுத்த புகார் மனுவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின் மாறுதலாகி இந்த வழக்கா னது மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.

    ஆகையால் இவர்களிடம் "வாகூ நெட் பிரைவேட் லிமிடெட்" என்ற நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்க ளுடன் மதுரை பொருளா தார குற்றப்பிரிவு, எண். 39 விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை -14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன்பேரில் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இதேபோன்று மதுரை கரிமேடு தெற்குமடம் பகுதியை சேர்ந்த செல்வ ராஜ், வைகை வடகரை பகுதியில் "அயன் கியாஸ் ஏெஜன்சீஸ்" என்ற பெயரில் சூப்பர் கியாஸ் நிறுவன முகவராக இருந்தார். அதன் பெயரில் தீபாவளி சிறப்பு பண்டு நிறுவனமும் நடத்தினார்.

    வாரம் ரூ.100 வீதம் 52 வாரங்கள் செலுத்தினால் முடிவில் ரூ.5 ஆயிரத்து 200க்கு வட்டியுடன் ரூ.7 ஆயிரம், வாரம் 10 பேருக்கு அடுப்பு, 2 கிேலா சிலிண்டருடன் இணைப்பும், 25 சீட்டு பிடிக்கும் நபர்களுக்கு ஒரு சீட்டு இலவசம் எனவும் கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இவர் ஆசைவார்த்தை கூறி மோசடி செய்ததாக கரிமேடு கார்த்திகேயன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.

    எனவே இந்த மோசடி நபரிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஆவணங்க ளுடன் மதுரை விஸ்வநாத புரம் மெயின் ரோட்டில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணம் அருகே உள்ள சக்கரவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் திவ்யா (வயது 19).

    இவர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நானும், ரெகுநாதபுரம் சக்திபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராஜ குருவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தோம். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் நெருங்கி பழகினார். இதில் நான் கர்ப்பமானேன். உடனே என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜகுருவிடம் கூறினேன். அப்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜகுருவை தேடி வருகிறார்.

    ×