search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நன்கொடை வசூலித்து ஏமாற்றும் கும்பல்
    X

    நன்கொடை வசூலித்து ஏமாற்றும் கும்பல்

    • பயணிகள்-பொதுமக்களிடம் நன்கொடை வசூலித்து ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
    • 24 மணி நேரமும் பயணிகளிடம் வசூல் வேட்டை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகரில் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிலர் பணமோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் வரும் பயணிகளிடம் "காப்பகம் நடத்துகிறோம். நன்கொடை வழங்குங்கள்" என்று 24 மணி நேரமும் பயணிகளிடம் வசூல் வேட்டை நடக்கிறது.

    மேலும் சிலர் மாற்றுத்திறனாளிகள் என்று தெரிவித்தும் பஸ்களில் ஏறி மக்கள் மத்தியில் பேசி வசூல் செய்கின்றனர். இதில் பலர் மோசடி நபர்கள் என்றும், அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல் ரெயில் நிலையம் மற்றும் மீனாட்சி கோவில் வரும் மக்களிடம் "நாங்கள் காப்பகத்தில் இருந்து வருகிறோம்" என்று தெரிவித்து சில பெண்கள் நன்கொடை வசூலித்து செல்கின்றனர்.

    இவர்கள் அடிக்கடி மதுரையில் முகாமிட்டு வசூல் செய்து வருகின்றனர். இவர்கள் பின்னணியில் மோசடி நபர்கள் இருப்பதுபோல் தெரிகிறது. இவர்கள் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது. இருந்த போதிலும் பலர் அவர்களிடம் பணம் கொடுத்து வருகின்றனர்.

    இவர்கள் உண்மையை தெரிவித்து வசூல் செய்தார் களா ? அல்லது போலி நபர்களா? என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முன்வருவார்களா?

    Next Story
    ×