என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amount"

    • மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • இதனால் ெஹல்மெட் அணிபவர்களின் சதவீதம் 60-ல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    அபராதம்

    அதன்படி போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், விதிமுறைகள் மீறியவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் விபத்தை குறைக்கும் வகையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    சி.சி.டி.வி. காமிரா

    மேலும் சி.சி.டி.வி. காமிராக்கள் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர். இதில் போக்குவரத்து விதி மீறும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அவ்வாறு கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை போக்குவரத்து விதி மீறியதாக 40 ஆயிரம் வழக்குககள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மாதந்தோறும் 15 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் ெஹல்மெட் அணிபவர்களின் சதவீதம் 60-ல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளது. வருங்காலங்களில் இது மேலும் உயரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    2800 வழக்குகள் பதிவு

    மேலும் இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கால கட்டத்தில் போதையில் வாகனம் ஓட்டிய 2800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்க–ளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டாதவர்களுடைய லைசென்ஸ்-ஐ தற்காலி–மாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரிந்துரை செய்கிறோம்.

    இதனை பரிசீலித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போதையில் வாகனம் ஓட்டியவர்களின் லைசென்சை ரத்து செய்து வருகின்றனர்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    • நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 சதவீதம் வேலை வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக ளுக்கான சங்க ஆலோசனை கூட்டம் தாராசுரத்தில் மாநகர துணை செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், மாவட்ட இணை செயலாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் செல்வம், ஐயப்பன், தாராசுரம் பேரூராட்சி செயலாளர் தி.மு.க. சாகுல் ஹமீது, ஒன்றிய பொறுப்பாளர் காமாட்சி, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில்:-

    மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ச்சியாக தலையீடு செய்து அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளோம்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்தி ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளி டமிருந்து பல்வேறு உபகரண ங்களை, சலுகைகளை, உரிமைகளை தொடர்ந்து போராடி பெற்று தருகிறோம் என்றார்.

    கூட்டத்தில், நாடு முழுவதும் மாற்றுத்தி றனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும், மாற்றுத்தி றனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ. 3,000-மும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,000-மும் வழங்க வேண்டும், அரசு துறையில் 4 சதவீதமும், தனியார் துறையில் 5 சதவீதமும் வேலை வழங்க வேண்டும், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற உள்ள 4-வது மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ. 32,556 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • 20 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பீடு தொகை பத்திரம் ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் வழங்கினார்.

    அப்போது சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கூறியதாவது:-

    திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 84,99,088 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உலக நலத்துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ. 32,556 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு நடவு எந்திரம் டிராக்டர் ரூ. 13,01,532 லட்சம் மதிப்பீட்டிலும் , சமூக நலத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பீடு தொகை பத்திரம் ரூ. 10,00,000 லட்சம் மதிப்பில் என மொத்தம் 838 பயனாளிகளுக்கு ரூ. 84,99,088 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள்அன்பழகன், கிரி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றியக் குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) முத்து மீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் லதா, தாசில்தார்கள் சந்தனவேல், பிரபாகரன், கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • உளவுத்துறையில் சிறப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
    • தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்:

    இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். கள்ளக்குறிச்சி கலவரம் மாநில உளவுத்துறை தோல்வியையே காட்டுகிறது. இதனால் உளவுத்துறையில் சிறப்பான அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

    பெரியார் கல்லூரியில் வினாத் தாளில் தாழ்த்தப்பட்ட சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தலைவர் பெரியசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×