என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயனாளி ஒருவருக்கு நெல் நடவு எந்திரத்தை சட்டபேரவை துணை தலைவர் பிச்சாண்டி வழங்கினார்.
ரூ.84.99 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்- சட்டப்பேரவை துணைத்தலைவர் வழங்கினார்
- தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ. 32,556 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- 20 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பீடு தொகை பத்திரம் ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் வழங்கினார்.
அப்போது சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கூறியதாவது:-
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 84,99,088 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உலக நலத்துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ. 32,556 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு நடவு எந்திரம் டிராக்டர் ரூ. 13,01,532 லட்சம் மதிப்பீட்டிலும் , சமூக நலத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பீடு தொகை பத்திரம் ரூ. 10,00,000 லட்சம் மதிப்பில் என மொத்தம் 838 பயனாளிகளுக்கு ரூ. 84,99,088 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள்அன்பழகன், கிரி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றியக் குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) முத்து மீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் லதா, தாசில்தார்கள் சந்தனவேல், பிரபாகரன், கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






