search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு துறையில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

    அரசு துறையில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

    • நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 சதவீதம் வேலை வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக ளுக்கான சங்க ஆலோசனை கூட்டம் தாராசுரத்தில் மாநகர துணை செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், மாவட்ட இணை செயலாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் செல்வம், ஐயப்பன், தாராசுரம் பேரூராட்சி செயலாளர் தி.மு.க. சாகுல் ஹமீது, ஒன்றிய பொறுப்பாளர் காமாட்சி, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில்:-

    மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ச்சியாக தலையீடு செய்து அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளோம்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்தி ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளி டமிருந்து பல்வேறு உபகரண ங்களை, சலுகைகளை, உரிமைகளை தொடர்ந்து போராடி பெற்று தருகிறோம் என்றார்.

    கூட்டத்தில், நாடு முழுவதும் மாற்றுத்தி றனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும், மாற்றுத்தி றனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ. 3,000-மும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,000-மும் வழங்க வேண்டும், அரசு துறையில் 4 சதவீதமும், தனியார் துறையில் 5 சதவீதமும் வேலை வழங்க வேண்டும், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற உள்ள 4-வது மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×