search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "proof"

    • விருதுநகர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் இணையதளம் வழியாக ஆயுள்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழிலாளர் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெ.காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம் முதலான 18 அமைப்புச்சாரர் தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களில் 60 வயது முடிவடைந்த உறுப்பினர்களுக்கு விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஓய்வூதியதாரர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் விருதநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்திற்கு வருகை தந்து ஆயுட்சான்று சமர்ப்பிக்கின்றனர். தற்போது ஓய்வூதிய தாரர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் வருகிற 9-ந் தேதி முதல் அமைப்பு சாரா தொழிலா ளர்கள் நலவாரியங்களின் இணையதளத்தில் (tnuwwb.tn.gov.in) ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் முதலான 18 அமைப்பு சாரா நலவாரி யங்களின் கீழ் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தின் மூலம் ஏற்கனவே மாதந்திர ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு), ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை (PPO), வங்கி கணக்கு எண் மற்றும் நேரடி புகைப்படம் ஆகிய விவரங்களுடன் இணையதளத்தில் (tnuwwb.tn.gov.in) ஆயுள்சான்றினை சமர்ப்பிக்கலாம்.

    ஓய்வூதிய ஆணை இல்லாதவர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகபரியில் ஓய்வூதிய தாரரின் ஓய்வூதிய விண்ணப்ப எண் மற்றும் தொழிலாளர் நல வாரிய பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து ஓய்வூதிய ஆணை (Pension Order)-யை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    ஓய்வூதிய விண்ணப்ப எண் தெரியாத ஓய்வூதிய தாரர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய இணையதளத்தின் முகப்பில் இருக்கும் "விண்ணப்பத்தின் எண்ணை அறிய" என்ற வசதியை பயன்படுத்தி பதிவு செய்த தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்தும் அல்லது Login-ல் பயனாளியின் பெயர் (User namc) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து Application History-ல் ஓய்வூதிய விண்ணப்ப எண்ணை அறிந்து கொள்ளலாம்.

    ஓய்வூதியதாரர்கள் இணையதளம் வழியாக மட்டுமே ஆயுள்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட ஓய்வூதிய தாரர்களிடம் இருந்து ஆயுள்சான்று இந்த அலுவலகத்தில் நேரில் பெற இயலாது என்ற விவரம் தெரிவிக்கப் படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
    • பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரம் சிமிலி கிராமத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் மாநில அளவிலான பருத்தி பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தான பயிற்சி நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார்.

    அதனைத் தொடர்ந்து பயிற்சியின் பருத்தி சாகுபடி தொழில்நுட்ப கையேட்டை வெளியீட்டும் பருத்தி இடுபொருள் கண்காட்சியை துவக்கி வைத்து திருவாருர் மாவட்ட இணை இயக்குனர் லெட்சுமிகாந்தன் பேசுகையில்:-

    பருத்தி நமது மாவட்டத்தில் முதன்மை பணப்பயிராக பயிரிடப்படுகிறது.

    இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு ஏதுவாக கோ 17 என்ற ரகத்தினை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த ரகம் மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை போன்ற தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது விவசாயிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

    வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்) ஏழுமலை பருத்தி சாகுபடி செய்யக்கூடிய வயல்களில் அதற்கு முன்னதாக மண் மாதிரி சேகரம் மற்றும் நீர் மாதிரி சேகரம் எவ்வாறு செய்தல் வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார்.

    வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பயிற்சி அளிக்கையில் பருத்திப்பயிரில் மண் பரிசோதனைக்கு ஏற்ப தலை மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும் என்றும், உர அளவு, உரம் இடுதல் மற்றும் உர மேலாண்மை போன்ற தொழில்நுட்ப கருத்துகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) ஹேமா ஹப்சிபா நிர்மலா பேசுகையில்,பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியாக வருகிற 31-ந் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக காப்பீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார் .மேலும் ஜெயப்பிரகாஷ் வேளாண்மை உதவி இயக்குனர் (விதை சான்று) பருத்தி விதைச்சான்று நடைமுறைகள் மற்றும் அங்கக்சான்று எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற தொழில்நுட்ப கருத்துகளை எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் அருள்செல்வி, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்த்தில் ஸ்பிரேயர் பருத்தி நுன்னுட்டம், தார்ப்பாய் போன்ற பருத்திக்குத் தேவையான இடுபொருட்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    இப்பபயிற்சி முகாமில் சிமிலி ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
    • பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.

    திருவாரூர்:

    தமிழக அரசின் அவ்வையார் விருது. பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெற டிச 10க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, உலக மகளிர் தின விழா 8.3.2023-ம் அன்று நடைபெறவுள்ளது.

    இவ்விழாவின் போது பெண்களின் முன்னே ற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு தமிழக முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது பெறுபவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் தொடர்பான இணையதள முகவரிக்கு சென்று பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்விருதுகள் தொடர்பான கூடுதல் விபரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள விண்ணப்ப படிவங்கள் ஆகியவை திருவாரூர் மாவட்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் இருப்பின் அவர்கள் இணையதளம் வாயிலாக 10.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு திருவாரூர் மாவட்ட கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டு க்கொண்டுள்ளார்.

    • நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் 5 சதவீதம் வேலை வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக ளுக்கான சங்க ஆலோசனை கூட்டம் தாராசுரத்தில் மாநகர துணை செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் அன்புமணி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், மாவட்ட இணை செயலாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் செல்வம், ஐயப்பன், தாராசுரம் பேரூராட்சி செயலாளர் தி.மு.க. சாகுல் ஹமீது, ஒன்றிய பொறுப்பாளர் காமாட்சி, பொருளாளர் ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில்:-

    மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு பிரச்சினைகளில் தொடர்ச்சியாக தலையீடு செய்து அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளோம்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்தி ற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளி டமிருந்து பல்வேறு உபகரண ங்களை, சலுகைகளை, உரிமைகளை தொடர்ந்து போராடி பெற்று தருகிறோம் என்றார்.

    கூட்டத்தில், நாடு முழுவதும் மாற்றுத்தி றனாளிகள் செல்லத்தக்க ஒரே அடையாள சான்று வழங்க வேண்டும், மாற்றுத்தி றனாளிகள் மாதாந்திர பராமரிப்பு தொகை ரூ. 3,000-மும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5,000-மும் வழங்க வேண்டும், அரசு துறையில் 4 சதவீதமும், தனியார் துறையில் 5 சதவீதமும் வேலை வழங்க வேண்டும், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற உள்ள 4-வது மாநில மாநாடு பேரணி பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் செயல்பட்டு வருகிறது.
    • 2 தனியார் பள்ளிகள், உணவகங்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு பாராட்டு சான்று களை ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமையில், துணைத்த லைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில் திடக்கழிவு மேலாண்மை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் மக்க வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்ட த்தின்படி பள்ளிகள், உணவகங்களிலும் இத் திட்டம் செயல்படுகிறது.

    இப்பணியில் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ஒவ்வொருவார்டாக சென்று பொதுமக்கள் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு செய்து, அதை மேற்பார்வை செய்து தற்போது நகராட்சி முழு வதும் தூய்மையை கடைப்பிடிக்கும் நிலை கொண்டுவந்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பாலம் தொண்டு நிறுவனம், 2 தனியார் பள்ளிகள், உணவகங்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மேலும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது, தொடர்ந்து இது போன்று பாராட்டுகள் செய்யப்படும், நகரின் தூய்மைக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற நியமன குழு உறுப்பினர் பாண்டியன், பொறியாளர் பிரதான் பாபு, மேலாளர் சிற்றரசு, நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட நகராட்சி பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை இருப்பதை நிரூபிக்காவிட்டால் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Sitapur #submittoiletproof
    லக்னோ:

    இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் மின்வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை சீர்திருத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. குறிப்பாக திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களை உருவாக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை கட்டியதற்கான ஆதாரத்தையும், அந்த கழிவறை அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



    அவ்வாறு அதிகாரிகள் சமர்ப்பிக்க மறுத்தால், மே மாதத்துக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Sitapur #submittoiletproof
    ×