search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்று
    X

    தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வழங்கினார்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு சான்று

    • மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் செயல்பட்டு வருகிறது.
    • 2 தனியார் பள்ளிகள், உணவகங்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு பாராட்டு சான்று களை ஆணையர் அப்துல் ஹரிஸ் தலைமையில், துணைத்த லைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில் திடக்கழிவு மேலாண்மை பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் நுண்ணுரம் தயாரிப்பு மையம் மூலம் மக்க வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்ட த்தின்படி பள்ளிகள், உணவகங்களிலும் இத் திட்டம் செயல்படுகிறது.

    இப்பணியில் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ஒவ்வொருவார்டாக சென்று பொதுமக்கள் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு செய்து, அதை மேற்பார்வை செய்து தற்போது நகராட்சி முழு வதும் தூய்மையை கடைப்பிடிக்கும் நிலை கொண்டுவந்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பாலம் தொண்டு நிறுவனம், 2 தனியார் பள்ளிகள், உணவகங்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மேலும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது, தொடர்ந்து இது போன்று பாராட்டுகள் செய்யப்படும், நகரின் தூய்மைக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற நியமன குழு உறுப்பினர் பாண்டியன், பொறியாளர் பிரதான் பாபு, மேலாளர் சிற்றரசு, நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட நகராட்சி பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×