search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரம் நடராஜன் கோவிலில் அரசு தலையிட்டது ஏன்?
    X

    கள்ளழகர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு நவீனமயமான பிரசாத தயாரிப்பு கூடத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் முரளிதரன், கலெக்டர் சங்கீதா உள்ளனர். 

    சிதம்பரம் நடராஜன் கோவிலில் அரசு தலையிட்டது ஏன்?

    • சிதம்பரம் நடராஜன் கோவிலில் அரசு தலையிட்டது ஏன்? என மதுரையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
    • அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத்துறைக்கு உண்டு.

    மதுரை

    மதுரை மாவட்டம், அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நவீன பிரசாத தயாரிப்பு கூடத்தை யும், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புனர மைக்கப்பட்ட சிறுவர் பூங்கா வையும் பயன் பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள்.

    அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலை யத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் கோவில் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மதுரை அழகர்கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விைரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஒரு மாதத்தில் ராஜ கோபுரத்திற்கும், அடுத்த 2 மாதத்தில் கள்ளழகருக்கும் குடமுழுக்கு நடத்திட திட்ட மிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 764 கோவில்களில் 501 கோவில்களுக்கு மத்திய அரசின் தர சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் கோவிலை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. சுவாமிமலை கோவில், திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவி லுக்கு ரோப்கார் ஆகியவற்றிற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் 812 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப் பட்டுள்ளது.எனவே இந்த ஆட்சியை "குட முழுக்கின் உற்சவ ஆட்சி" என சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

    கடந்த ஆண்டு மேற்கொண்ட குடமுழுக்கு உள்ளிட்ட திருப்பணிகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் கூடுதலாக தொடர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்ட பத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறை வடையும்.

    அதனை தொடர்ந்து கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தும் பணிகள் நடைபெறும். அழகர் மலையில் சாலை அமைக்கும் பணிகளுக்காக வனத்துறை யின் அனுமதி பெறப்பட்டு ஓரிரு நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர் - பக்தர் உறவு சமூகமாக இல்லா விட்டால் அதை கேட்கும் உரிமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு. பக்தர்கள், இறைவனுக்கு அடுத்த படியாக கருதுவது தீட்சிதர்களையும், அர்ச்ச கர்களையும் தான். அதை மதித்து பக்தர்களை கவுரவிக்க வேண்டிய பொறுப்பு தீட்சி தர்களுக்கு உண்டு. அப்படிபக்தர்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால் அங்கு அரசு தலையிடும். கோவிலில் சட்டமீறல் இருந்தால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் அதைக்கேட்கும் அனைத்து உரிமையும் இந்துசமய அறநிலையத் துறைக்கு உண்டு.

    உயர்நீதிமன்ற ஆணையை தீட்சிதர்கள் மீறியதால் தான் அரசு அதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசின் ஆணையை மீறியஅர்ச்சகர்களின் நடவடிக்கையை உடைத்து எறிந்து பக்தர்கன் கனகசபை மீது ஏறி நான்காவது நாள் தரிசனம் செய்தார்கள். இதை ஒரு போட்டியாக கருதவில்லை.

    பக்தர்களின் தேவையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு தெய்வத்திற்கு பணிவிடை செய்யும் தீட்சிதர்களுக்கு உண்டு. நேர்மையாக, மனசாட்சி யுடன் நடந்து கொள்ள வேண்டும். தனியார் வசம் சொத்துக்கள் இருந்த போது கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு உள்ளன. அதன் காரணமாகத்தான் அறநிலைய துறை வசம் கொண்டு வரப்பட்டன. அரசிடம் உள்ள வரை தான்கள்சொத்துக்கள், பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்க் அனைவருக்கும் பாதுகாப்பு என என்பதை உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தி.மு.க. பொருளாளர் சுந்தரபாண்டியன், இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் சசிக்குமார், மருதுபாண்டி, கவுன்சிலர் காளிதாஸ் உள்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×