search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோட்டில் தகவல் தொழில்நுட்பதுறை அரசு செயலாளர் குமரகுருபரன் ஆய்வு
    X

    திருச்செங்கோட்டில் தகவல் தொழில்நுட்பதுறை அரசு செயலாளர் குமரகுருபரன் ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் கலெக்டர் டாக்டர் உமா உள்ளார்.

    திருச்செங்கோட்டில் தகவல் தொழில்நுட்பதுறை அரசு செயலாளர் குமரகுருபரன் ஆய்வு

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் பல்வேறு பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து, திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் கருவிகள் வைப்பு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

    இந்த ஆய்வின்போது முகாமிற்கு தேவையான கருவிகள் உள்ளனவா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக எடுத்துரைத்து நிவர்த்தி செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    ஆய்வு

    மேலும், சட்டையம்புதூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு மாதிரி முகாம் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு முகாமில் அமைக்கப்பட்டுள்ள தன்னார்வலர் உதவி மையம், விண்ணப்ப பதிவு மையம், விண்ணப்ப பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பணிகள், விண்ணப்ப பதிவு நடைமுறைகள், பொதுமக்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் ஆகியவைகள் குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

    அடிப்படை வசதிகள்

    இந்த ஆய்வின் போது பொதுமக்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    மேலும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளையும் உறுதி செய்து கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    பின்னர் திருச்செங்கோடு நகராட்சியில் சூரியம்பாளையம் நியாய விலை கடை, ராஜா கவுண்டம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆண்டிப்பாளையம், அணிமூர் கிராம ஊராட்சி சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்கள்.

    மேலும் திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இரண்டு இ - சேவை மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மையத்தில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .செல்வகுமரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, இ-சேவை மாவட்ட மேலாளர் சுந்தரராஜ், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் .ஜெயராமராஜா, தாசில்தார் பச்சமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், .கஜேந்திரபூபதி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×