search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government job"

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    சித்ரதுர்கா:

    கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, கோலார் உள்பட சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தல் வெறுப்பு, கோபம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கும், அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்ற பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்துக்கும், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கிலும் ரூ.3.6 லட்சம் (வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு) செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதிக்கும் இடையேயான போர்.

    அனில் அம்பானிக்கும், சாதாரண மக்களுக்கும் இடையேயான போர். 5 வருட அநியாயங்களுக்கும், காங்கிரசின் ‘நியாய்’ (குறைந்தபட்ச வருமானம்) திட்டத்துக்கும் இடையேயான போட்டி. திருடர்களுக்கும், கவுரவமான மக்களுக்கும் இடையேயான போட்டி.

    விவசாயி, தொழிலாளர், வேலையில்லாதவர் வீட்டு வாசல்களில் காவலாளி நிற்பதை பார்த்திருக்கிறீர்களா? அனில் அம்பானி வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள். இந்த காவலாளி 15 முதல் 25 பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே காவலுக்கு இருக்கிறார். கடனை செலுத்தாத விவசாயிகளை சிறையில் அடைக்கிறார். ஆனால் அனில் அம்பானியை சிறையில் அடைப்பதில்லை.

    நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று ஏன் எல்லா திருடர்களும் மோடி என்ற துணைப்பெயரை கொண்டிருக்கிறார்கள்? இன்னும் இதுபோல எத்தனை மோடிகள் வருவார்களோ நமக்கு தெரியாது. ரபேல் விவகாரத்தில் காவலாளி நிச்சயம் திருடர் தான். பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று கூறியதை, அமித்‌ஷா சும்மா தேர்தலுக்காக சொன்னது என்று சொல்கிறார்.



    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்யப்படும். ஒருமுனை வரியாக மாற்றுவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். இந்திய பொருளாதாரத்தையும், மக்களையும் சீரழித்த கப்பர் சிங் டாக்ஸ் (ஜி.எஸ்.டி.) வரிமுறைக்கு முடிவுகட்டப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை அருகிலுள்ள புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 29). இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

    உசிலம்பட்டி கலாம் நகரைச் சேர்ந்த சத்யசீலன் (31) மற்றும் அவரது தாயார் பாண்டியம்மாள் தேவி ஆகியோர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி தந்தனர். இதன் அடிப்படையில் நான் அவர்களிடம் ரூ.13 லட்சம் கொடுத்தேன்.

    இதையடுத்து எனக்கு மத்திய அரசு நிறுவனத்தின் பணியாணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித்தருமாறு ரூ.15 லட்சம் கொடுத்தனர்.

    இதற்கிடையே நான் பணி ஆணையில் உள்ள நிறுவனம் குறித்து விசாரித்தேன். அப்போது அது போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. நாங்கள் அரசு வேலைக்காக கொடுத்த ரூ.28 லட்சத்தையும் சத்யசீலனும், பாண்டியம்மாள் தேவியும் திருப்பித்தர மறுத்து வருகின்றனர்.

    மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    புகார் மனு மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை தனக்கன்குளம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கோட்டூர் கருப்பு என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2014-ம் ஆண்டு என் மனைவி ஜோதிக்கு தமிழக அரசின் சத்துணவு மையத்தில் வேலை தேடி வந்தேன். அப்போது எம்.கல்லுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பாண்டி (50) மற்றும் அவரது மகன்கள் சந்திரசேகரன், குட்டிக்கண்ணன் ஆகிய 3 பேரும் என்னிடம் சத்துணவு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பிய நான் அவர்களிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்தேன். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி என் மனைவிக்கு வேலை வாங்கி தரவில்லை.

    நான் அவர்களிடம் என் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னிடம் வாங்கிய ரூ.2.60 லட்சத்தை திருப்பி தர மறுத்ததுடன் எனக்கு மிரட்டலும் விடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை அருகிலுள்ள புதுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 29). இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

    உசிலம்பட்டி கலாம் நகரைச் சேர்ந்த சத்யசீலன் (31) மற்றும் அவரது தாயார் பாண்டியம்மாள் தேவி ஆகியோர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி தந்தனர். இதன் அடிப்படையில் நான் அவர்களிடம் ரூ.13 லட்சம் கொடுத்தேன்.

    இதையடுத்து எனக்கு மத்திய அரசு நிறுவனத்தின் பணியாணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது நண்பர்களுக்கும் அரசு வேலை வாங்கித்தருமாறு ரூ.15 லட்சம் கொடுத்தனர்.

    இதற்கிடையே நான் பணி ஆணையில் உள்ள நிறுவனம் குறித்து விசாரித்தேன். அப்போது அது போலி நிறுவனம் என்பது தெரியவந்தது. நாங்கள் அரசு வேலைக்காக கொடுத்த ரூ.28 லட்சத்தையும் சத்யசீலனும், பாண்டியம்மாள் தேவியும் திருப்பித்தர மறுத்து வருகின்றனர்.

    மேற்கண்டவாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    புகார் மனு மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை தனக்கன்குளம் வேடர்புளியங்குளத்தை சேர்ந்த கோட்டூர் கருப்பு என்பவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2014-ம் ஆண்டு என் மனைவி ஜோதிக்கு தமிழக அரசின் சத்துணவு மையத்தில் வேலை தேடி வந்தேன். அப்போது எம்.கல்லுப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பாண்டி (50) மற்றும் அவரது மகன்கள் சந்திரசேகரன், குட்டிக்கண்ணன் ஆகிய 3 பேரும் என்னிடம் சத்துணவு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினர். இதனை நம்பிய நான் அவர்களிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்தேன். அவர்கள் வாக்குறுதி அளித்தபடி என் மனைவிக்கு வேலை வாங்கி தரவில்லை.

    நான் அவர்களிடம் என் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னிடம் வாங்கிய ரூ.2.60 லட்சத்தை திருப்பி தர மறுத்ததுடன் எனக்கு மிரட்டலும் விடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளா£ர்.

    இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான தமிழகத்தை சேர்ந்த 2 துணை ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. #PulwamaAttack #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர்(துணை ராணுவத்தினர்) மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையனின் மகன் சி.சிவசந்திரன் ஆகிய 2 வீரர்கள் உயிரிழந்தனர்.



    நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமது இன்னுயிரை தியாகம் செய்த, தமிழகத்தை சேர்ந்த துணை ராணுவத்தினர் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-2-2019 அன்று உத்தரவிட்டு, அத்தொகை உடனடியாக வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மறைந்த துணை ராணுவ வீரர்கள் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-2-2019 அன்று உத்தரவிட்டார்.

    பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் உயிரிழந்த ஜி.சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சி.சிவசந்திரனின் மனைவி காந்திமதிக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

    இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, அரசு தலைமைக் கொறடா எஸ்.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, அரியலூர் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) டி.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பலியான துணை ராணுவ வீரர் சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கு கயத்தார் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  #PulwamaAttack #EdappadiPalaniswami
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் தம்பிக்கு அரசு வேலை கிடைத்த பொறாமையால் வீட்டுக்கு அண்ணன் தீ வைத்த சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #Mansetsafire #brothergettinggovtjob
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள மடன்டோலா கிராமத்தை சேர்ந்தவர், கெடு மொன்டல். இவருடைய 4 மகன்களும் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். தேசிய தன்னார்வலர் படையில் பணியாற்றிவந்த கெடு மொன்டல் தனது பணிக்காலத்தின்போது சமீபத்தில் மரணம் அடைந்தார்.

    கெடு மொன்டலின் மறைவுக்கு பின்னர் அவரது இளைய மகன் கோபின்டா மொன்டல் என்பவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்பட்டது. தனக்கு கிடைக்காமல் தம்பிக்கு மட்டும் அரசு வேலை கிடைத்ததால் கெடு மொன்டலின் மகன்களில் ஒருவரான மக்கான் மொன்டல்(30) என்பவர் ஆத்திரம் அடைந்தார்.

    நேற்றிரவு, மடன்டோலா கிராமத்தில் உள்ள கெடு மொன்டலின் பூர்வீக வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். மனஉளைச்சலில் இருந்த மக்கான் மொன்டல்(30) திடீரென்று வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

    இதில் உள்ளே இருந்த கோபின்டா(28) அவரது மூத்த சகோதரர் பிகாஷ் மொன்டல்(32) மூன்று மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளான கோபின்டாவின் இரு மகள்கள் ஆகிய 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    பிகாஷ் மொன்டலின் மனைவி, மகன், மகள் மற்றும் கோபின்டா மொன்டலின் மனைவி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மால்டா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மனிக்ச்சக் காவல் நிலைய போலீசார், தலைமறைவாக இருக்கும் மக்கான் மொன்டலை கைது செய்வதற்காக தேடி வருகின்றனர். #Mansetsafire #brothergettinggovtjob
    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைதான 2 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். பனியன் தொழிலாளி.

    இவர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருந்ததாவது-

    திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை அடுத்துள்ள வாவிவாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (52). இவர் அரசு வேலை வாங்கி தருவதாக திருப்பூர் சோளிபாளையம் பகுதியில் வைத்து என்னிடம் கடந்த ஜூன் மாதத்தில் ரூ. 8 லட்சம் பெற்றார்.

    ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. மேலும் பணத்தை திருப்பி தராமலும் காலம் தாழ்த்தி வந்தார்.இது குறித்து ராஜேஸ்வரனிடம் நேரில் சென்று கேட்ட போது மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சாய் அருண் (48), கார்த்திகேயன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர்களுக்கு தலைமை செயலாளர் மிகவும் பழக்கம் என்றும் என்னிடம் தெரிவித்தனர்.

    ஆனால் இருவரும் பணத்தை பெற்றுக் கொண்டு என்னிடம் மோசடி செய்து விட்டனர். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    புகார் தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ராஜேஸ்வரன், சாய் அருண், கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் லட்சக் கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்கள் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் ராஜேஸ்வரன், சாய் அருண் ஆகியோரை கைது செய்தனர். கார்த்திகேயன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #tamilnews
    அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7.50 லட்சம் பணமோசடி செய்த அரியலூர் ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம்  சக்திநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரை நெய்வேலியை சேர்ந்த சிவக்குமார், சு.ஆடுதுறையை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் அணுகி, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். 

    இதையடுத்து விஸ்வநாதன், அவரது நண்பரான அரியலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ராயப்பன் என்பவரை அணுகியுள்ளார். அவர் கரூரை சேர்ந்த சேர்மன் என்பவர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக  சிவக்குமார், மணிகண்டன் ஆகியோரிடமிருந்து  முன்பணமாக ரூ.7.50 லட்சத்தை வாங்கிய விஸ்வநாதன், அதனை ராயப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால்  நீண்ட நாட்களாகியும் ராயப்பன் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. 

    இது குறித்து விஸ்வநாதன் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, இது குறித்து நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில்  போலீசார் ஆசிரியர் ராயப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    விழுப்புரம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி காங்கிரஸ் பிரமுகரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள பெரியகரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63), காங்கிரஸ் பிரமுகர். இவருடைய மகன் சக்திவேல் (25). இவர் பி.இ. மெக்கானிக்கல் முடித்துள்ளார். சண்முகத்திற்கும் செஞ்சி- திருவண்ணாமலை சாலை புதுத்தெருவை சேர்ந்த அரங்ககாந்தி (53) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது அரங்ககாந்தி, டெல்லியில் தனக்கு அரசு அதிகாரிகள் சிலரை நன்கு தெரியும், அவர்கள் மூலமாக சக்திவேலுக்கு மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக சண்முகத்திடம் கூறியுள்ளார்.

    இதை நம்பிய சண்முகம், அரங்ககாந்தியிடம் எப்படியாவது தனது மகனுக்கு மத்திய அரசு பணி வாங்கித்தரும்படி கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்று கூறிய அரங்ககாந்தி, சண்முகத்திடம் இருந்து ரூ.8 லட்சத்து 16 ஆயிரத்தை பெற்றார்.

    பின்னர் சில மாதங்கள் கழித்து வேலைக்கான உத்தரவு வந்துவிட்டதாக கூறி பல்வேறு ஆவணங்களை சண்முகத்திடம் அரங்ககாந்தி கொடுத்துள்ளார். அந்த ஆவணங்களை கொண்டு வேலைக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டபோது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சண்முகம், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அரங்ககாந்தியை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று செஞ்சியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற அரங்ககாந்தியை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். # tamilnews
    ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சோலார் இரணியன் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தா (வயது 30).

    இவர் கிராம நிர்வாக அதிகாரி வேலை பெற முயற்சித்து வந்தார். இந்த தகவல் அறிந்த கரூர் மாவட்டம் பரஞ்சர்வழி குடித்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (57) என்பவர் சாந்தாவை தொடர்பு கொண்டார்.

    ‘‘உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன்’’ என்று கூறிய செந்தில்குமார், அதற்கு ரூ. 3 லட்சம் வேண்டும் என்று கேட்டார். அவர் கேட்டபடி ரூ. 3 லட்சம் பணத்தை செந்தில்குமாரிடம் சாந்தா கொடுத்தார்.

    ஆனால் செந்தில்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து செந்தில்குமாரிடம் சாந்தா போன் செய்து கேட்டார்.

    ஆனால் செந்தில்குமார் சரியான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் சாந்தா கேட்டதால், ‘‘வேலை வாங்கி தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்’’ என்று கூறி உள்ளார்.

    மேலும் தொடர்ந்து இது பற்றி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சாந்தா புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கைதான செந்தில்குமார் கரூர் மாவட்டம் நல்லூர் பகுதியில் இது போன்று அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றார்.

    சுமார் 80 பேரை ஏமாற்றி ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளார். இந்த மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

    இது தொடர்பாக நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் செந்தில் குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் தற்போது சாந்தாவிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே இதுபோல வேறு யாரிடமும் செந்தில்குமார் மோசடி செய்துள்ளாரா? என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    இந்தியாவுக்கு இரு உலக கோப்பைகளை வென்றுதந்த பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கர்நாடக அரசு வேலை வழங்க வேண்டும் என இந்த அணியின் முன்னாள் கேப்டன் வலியுறுத்தியுள்ளார். #governmentjob #Blindcricketers #ShekharNaik
    பெங்களூரு:

    பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சேகர் நாயக் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பார்வையற்றோருக்கான கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்றை அமைக்கப் போவதாக குறிப்பிட்ட அவர், பலமுறை தனக்கு அரசு வேலை வழங்கப்படாததால் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

    தனது தலைமையில் பார்வையற்றோருக்கான 20-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாட்டுக்கு இரண்டு முறை உலக கோப்பைகளை பெற்று தந்தும் இந்த அணியின் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

    உலக நாடுகளில் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கேரளாவில் இவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடக மாநில அரசும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். #governmentjob #Blindcricketers #ShekharNaik
    அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 40 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், குசவன்குண்டு அருகே உள்ள குதிரைகுத்தியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). பட்டதாரியான இவர், அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    அப்போது செங்கல்பட்டைச் சேர்ந்த சேகர் (58), அவரது மனைவி கிளாடி (50) ஆகியோர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டனர்.

    தலைமை செயலகத்தில் வேலை பார்ப்பதாக கூறிய சேகர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தனக்கு முக்கியமான நபர்களை தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித்தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பி ஜெயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரூ. 40லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால் சேகர் வேலை எதுவும் வாங்கித்தரவில்லை.

    பலமுறை பணம் கேட்டும் சேகர் மற்றும் கிளாடி தர மறுத்ததால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஜெயக்குமார் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    அருமனை அருகே அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சரின் உறவினர் என கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த தந்தை-மகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    அருமனை அருகே சென்னித்தோட்டம் மடத்து விளாகத்து பகுதியைச் சேர்ந்தவர் சிவனந்தன் (வயது 63). இவர் நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    எனது உறவினர்கள் ஜெரால்டு மற்றும் ஷோபா ஆகியோரிடம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் தெற்கு ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுக பாண்டியன் மற்றும் அவரது மகள் துர்கா ஆகியோர் அமைச்சரின் உறவினர் என்று கூறி அறிமுகம் ஆனார்கள். பின்னர் தந்தை, மகள் இருவரும் அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி எனது உறவினர்களிடம் கூறினார்கள். அவர்களை நம்பி வங்கி மூலமாகவும், நேரிடையாகவும் ரூ.7 லட்சம் பணம் கொடுத்தனர். பணம் கொடுத்த பிறகு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    இதனால் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டனர். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

    இன்ஸ்பெக்டர் ஜானகி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆறுமுக பாண்டியன், துர்கா ஆகியோர் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 420 ஐ.பி.சி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    ×