என் மலர்
செய்திகள்

பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அரசு வேலை - முன்னாள் கேப்டன் வலியுறுத்தல்
இந்தியாவுக்கு இரு உலக கோப்பைகளை வென்றுதந்த பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கர்நாடக அரசு வேலை வழங்க வேண்டும் என இந்த அணியின் முன்னாள் கேப்டன் வலியுறுத்தியுள்ளார். #governmentjob #Blindcricketers #ShekharNaik
பெங்களூரு:
பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சேகர் நாயக் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பார்வையற்றோருக்கான கிரிக்கெட் பயிற்சி மையம் ஒன்றை அமைக்கப் போவதாக குறிப்பிட்ட அவர், பலமுறை தனக்கு அரசு வேலை வழங்கப்படாததால் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

தனது தலைமையில் பார்வையற்றோருக்கான 20-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாட்டுக்கு இரண்டு முறை உலக கோப்பைகளை பெற்று தந்தும் இந்த அணியின் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
உலக நாடுகளில் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. கேரளாவில் இவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கர்நாடக மாநில அரசும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். #governmentjob #Blindcricketers #ShekharNaik
Next Story






