search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Examination"

    • இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே தேவனாஞ்சேரி கீழத்தெ ருவை சேர்ந்தவர் மகேந்திரன்.

    இவரது மகன் தேசிகன் (வயது 26).

    கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

    • கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • மருத்துவக் குழுவினர் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர்.

    கீழக்கரை

    கீழக்கரை அரசு ஆஸ் பத்திரியில் முதல்-அமைச் சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் யோஜ னா திட்டத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் சகாய ஸ்டீபன் ராஜ் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேன் தலைமையில் நடந் தது.

    இம்முகாமில் டாக்டர்கள் பிரவீன் ராஜ்(பொது), சரத் குமார் (அறுவை சிகிச்சை நிபுணர்), பிரகாஷ் (எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை) ராஜ வசந்த குமாரி(பெண்கள் நலம்) ஆகியோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஏராளமானோருக்கு இலவச இ.சி.ஜி., எக்ஸ்ரே சோதனை நடந்தது.

    மேலும் முதல்-அமைச்சர் காப்பீடு, பிரதமர் காப்பீடு திட்டத்திற்கானபுதிய மருத் துவ காப்பீட்டு திட்டம் பதிவு நடைபெற்றது. இஸ் லாமியா மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவர்கள் மருத்துவ முகாமிற்கு வந்த பொது மக்களுக்கு உதவி புரிந்தனர். மருத்துவக் குழுவினர் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரை வழங்கினர்.

    • தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது.

    மதுரை

    இந்திய பள்ளிகள் விளை யாட்டு குழுமத்தின் சார்பில் (எஸ்.ஜி.எப்.ஐ.) சார்பில் தேசிய அளவிலான ஜிம் னாஸ்டிக் போட்டிகள் நடக் கிறது. இதற்கான தேர்வு மதுரையில் நடைபெற்றது. இதில் கோசாகுளம் சி.இ. ஓ.ஏ. பள்ளி மாணவி பவஸ்ரீ தனது திறமையை வெளிப்ப டுத்தி தேசிய போட்டிக்கு தமிழக அணிக்காக தேர்வு ஆனார்.

    இதன் மூலம் அவர் நவம்பர் 3-ந்தேதி டெல்லி யில் நடக்கும் தேசிய போட் டியில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர் வான மாணவியை, சி.இ. ஓ.ஏ. கல்வி குழும நிறுவன தலைவர் ராசா கிளைமாக்சு, தலைவர் சாமி, துணைத்த லைவர் ஜெயச்சந்திர பாண்டி, அசோகராஜ், முதன்மை தலைவர் கவுரி, மற்றும் உடல் கல்வி இயக்கு னர் செல்ல முருகன் ஆகி யோர் பாராட்டி வாழ்த்தி னர்.

    • அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் காலாண்டு பருவ ஆய்வு மேற்கொண்டார்.
    • தாசில்தார் வேல்முருகன், உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் காலாண்டு பருவ ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)செந்தில்குமார், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் தயா இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.பி ரமேஷ், விழுப்புரம் நகரதலைவர் செல்வராஜ், விழுப்புரம் மத்திய மாவட்ட பொதுச்செயலாளர் வண்டிமேடு ராஜ்குமார், தே.மு.தி.க. நகரத் தலைவர் மணிகண்டன், பகுஜன் சமாஜ் கட்சி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ஐ மாவட்ட நிர்வாகி, தனி தாசில்தார் (தேர்தல்) கோவர்தனன், தாசில்தார் வேல்முருகன், உள்ளிட்ட பலர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    • புஷ்பாம்பாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • சிவஞானம் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கீழநாகை பகுதியை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 73). இவரது மனைவி புஷ்பாம்பாள் (70). இவர்களுக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் மருமகள், பேரக்குழந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி மாலை புஷ்பாம்பாளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அவரை மன்னார்குடி ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    புஷ்பாம்பாள் இறந்த துக்கத்தில் அவரது கணவர் சிவஞானம் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை சிவஞானம் திடீ ரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மன்னார்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் பாசம் அப்பகுதி மக்களையும், குடும்பத்தின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொ ண்டு வருகின்றன. இருந்த போதிலும் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ள நிலையில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிட த்தக்கதாகும். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம், வீடுகளுக்கு நேரில் சென்று வேறு யாரும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனரா? புகை கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளையும் மே ற்கொண்டு வருகின்றனர். இன்று காலை கடலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தனி வார்டை கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்னெ ன்ன சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது? அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் தனிவார்டில் கொசுவலை, சுகாதாரமாக உள்ளதா? உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்களா? மருந்து, மாத்திரை சரியா ன முறையில் வழங்க ப்படுகிற தா? என்பதனை கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் தடுக்கும் களப்ப ணியாளர்கள் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று அரசு நிபந்தனைக்கு உட்பட்டு பராமரிக்கப்படுகிறதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகை யால் பொதுமக்களுக்கு 5 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடி யாக அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று டெங்கு காய்ச்சல் உள்ளதா? என்பத னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தற்போது மாவட்டத்தில் ஒரே பகுதியில் 3 ேபர்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் பரிசோதனை மேற்கொ ண்டதில் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 56 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களில் அதிகரிப்புக்கு காரணம் என்னவென்றால் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்வதால், தற்போது 56 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால், மருத்து வமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனர்.
    • 103 பேர் அறுவை சிகிச்சைகாக புதுச்சேரி கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட், லயன்ஸ் சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, ஜெயின் சங்கம் ஆகியன சார்பில் 30-வது ஆண்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு முன்னாள் மாவட்ட ஆளுனர் கியான்சந்த் தலைமை வகித்தார்.

    மாவட்ட தலைவர்கள் எஸ்.சக்திவீரன்,யுவாராஜ்குமார், ராம்குமார், சோமசுந்தரம் வேல்முருகன் ராஜ்குமார் மண்டல தலைவர் செந்தில் வைரவன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்கத்தலைவர் சந்துரு வரவேற்றார். முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கே ற்று பரிசோதனை செய்துக்கொ ண்டனர்.

    இதில் 103பேர் அறுவை சிகிச்சைகாக இலவசமாக புதுச்சேரி கண் மருத்துவமனைக்கு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

    லயன் சங்க செயலாளர் சரவணகுமார் பொருளாளர் ஆரிப் அலி உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் அரிமா சங்கத்தை சேர்ந்த பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிறைவில் சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி தாளாளர் சுதேஷ் நன்றிக்கூறினார்.

    • எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.
    • 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 750 பணியிடங்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் (தாலுக்கா, ஆயுதப்படை, மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மற்றும் நிலை அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைபள்ளி, செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.

    முன்னதாக தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வந்தனர். பின்னர் அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தினர். தொடர்ந்து தேர்வு மையங்களை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு இன்று மதியம் நடைபெற உள்ளது.

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
    • சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வுக்கான ஏற்பாடு களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பி. அருண் கபிலன் தலைமையிலான போலீசார் செய்து வரு கிறார்கள். இந்த நிலையில் காரிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மின்னாம்பள்ளியில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியின் தேர்வு மையத்தை மாற்றி மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரியில் தேர்வு எழுத அனுமதி சீட்டு பெற்ற 1000 விண்ணப்ப தாரர்களும் அம்மையத்தின் எதிரில் உள்ள ஏ.வி.எஸ். கல்லூரி மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.

    எனவே மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரி மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் சின்னகவுண்டா புரத்தில் உள்ள ஏ.வி. எஸ். கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் தேர்வு எழுத வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என சேலம் மாவட்ட போலீஸ் சூபப்பிரண்டு அருண்கபிலன் தெரிவித்துள்ளார்.

    • மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
    • இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இன்று தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையார் பள்ளியில் மத்திய மாவட்ட தி.மு.க மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதற்கு மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் டாக்டர் மோகன்ராஜ், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்டத் தலைவர் டாக்டர் ராஜ் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த மருத்துவ முகாமை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் செவித்திறன் குறையுடைய மாணவ -மாணவிகளுக்கு பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தொடர்ந்து செவித்திறன் குறையுடைய மாணவ- மாணவிகள் பஸ், ரயில்களில் இலவசமாக பயணம் செய்வதற்கும், டோல்கேட்டில் செல்லும் போது உடன் செல்பவர்களுக்கு இலவச கட்டணம் ஆகியவற்றிற்கான இலவச பாஸ் கிடைப்பதற்காக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன், அவைத்தலைவர் இறைவன், செயற்குழு உறுப்பினர் செல்வம், பகுதி செயலாளர்கள் நீலகண்டன், சதாசிவம், கார்த்தி, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, நிர்வாகி தர்மராஜ், மருத்துவர் அணி நிர்வாகிகள் டாக்டர்கள் சதீஷ், சுரேஷ், ராஜா, விக்னேஷ், பாஷா, ராஜராஜன், காயத்ரி, பிரகாஷ், புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விக்கிரவாண்டி அருகே பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். டிராக்டர் டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலத்தில் அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கமாகி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அன்பழகனை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார்.
    • கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரா ட்சிக்குட்பட்ட திருப்பாதி ரிப்புலியூர் சரவணா நகர், கடலூர் முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைக்க ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண்டல அலுவலகம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் திருப்பா திரிப்புலியூர் சரவணா நகர், முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுச்சாமி, மாநகராட்சி பொறியாளர் மாலதி, தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×