கடலூரில் ரூ.5 கோடியில் மண்டல அலுவலகம் கட்டும் பணிக்கு இடம் தேர்வு:மேயர் சுந்தரி ராஜா நேரில் ஆய்வு

நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார். கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா உள்ளார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா உள்ளார்.
Published on

கடலூர்:

கடலூர் மாநகரா ட்சிக்குட்பட்ட திருப்பாதி ரிப்புலியூர் சரவணா நகர், கடலூர் முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைக்க ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண்டல அலுவலகம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் திருப்பா திரிப்புலியூர் சரவணா நகர், முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுச்சாமி, மாநகராட்சி பொறியாளர் மாலதி, தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com