search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதி: கடலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு வார்டில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்

    கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதி: கடலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொ ண்டு வருகின்றன. இருந்த போதிலும் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ள நிலையில் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் டெங்கு காய்ச்சலால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிட த்தக்கதாகும். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முகாம், வீடுகளுக்கு நேரில் சென்று வேறு யாரும் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனரா? புகை கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளையும் மே ற்கொண்டு வருகின்றனர். இன்று காலை கடலூர் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் தனி வார்டை கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்னெ ன்ன சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது? அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் தனிவார்டில் கொசுவலை, சுகாதாரமாக உள்ளதா? உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்களா? மருந்து, மாத்திரை சரியா ன முறையில் வழங்க ப்படுகிற தா? என்பதனை கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விரைவில் குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் தடுக்கும் களப்ப ணியாளர்கள் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று அரசு நிபந்தனைக்கு உட்பட்டு பராமரிக்கப்படுகிறதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகை யால் பொதுமக்களுக்கு 5 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் உடனடி யாக அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று டெங்கு காய்ச்சல் உள்ளதா? என்பத னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தற்போது மாவட்டத்தில் ஒரே பகுதியில் 3 ேபர்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களிடமும் பரிசோதனை மேற்கொ ண்டதில் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் 56 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களில் அதிகரிப்புக்கு காரணம் என்னவென்றால் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறையினர் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்வதால், தற்போது 56 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின்பால், மருத்து வமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×