search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் 4 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு:போலீஸ் ஐ.ஜி., சூப்பிரண்டு நேரில் ஆய்வு
    X

    கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வினை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் பார்வையிட்டார். அருகில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உள்ளார்.

    கடலூரில் 4 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு:போலீஸ் ஐ.ஜி., சூப்பிரண்டு நேரில் ஆய்வு

    • எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.
    • 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.

    கடலூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 750 பணியிடங்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் (தாலுக்கா, ஆயுதப்படை, மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மற்றும் நிலை அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைபள்ளி, செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.

    முன்னதாக தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வந்தனர். பின்னர் அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தினர். தொடர்ந்து தேர்வு மையங்களை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு இன்று மதியம் நடைபெற உள்ளது.

    Next Story
    ×