விக்கிரவாண்டி அருகே பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை

விக்கிரவாண்டி அருகே பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி அருகே பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். டிராக்டர் டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலத்தில் அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கமாகி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அன்பழகனை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com