search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England vs India"

    இந்தியாவிற்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 9.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.



    இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்குப் பதிலாக ஜேக் பால் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு இதுதான் முதல் டி20 போட்டியாகும். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    மூன்றாவதாக 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த மூன்று தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பிடித்திருந்தார்.

    அயர்லாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது பும்ராவின் இடது கை பெருவிரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் கடந்த புதன்கிழமை லீட்ஸில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன்பின் இந்தியா திரும்பியுள்ளார்.



    ஒருநாள் போட்டி தொடங்குவதற்குள் பும்ரா காயம் குணமடைய வாய்ப்பில்லை. இதனால் பும்ராவிற்குப் பதிலாக மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    பும்ரா பிசிசிஐ-யின் மெடிக்கல் குழுவின் மேற்பார்வையில் குணமடைவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளார். அவரது காயம் குணமடைவதற்கான கால அவகாசம் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதனால் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
    முதல் டி20 போட்டியின்போது குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் செய்த காரியங்கள் கிரிக்கெட்டிற்கு அழகல்ல என டேவிட் வில்லே தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 3-ந்தேதி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் அதிரடி சதத்தால் இந்தியா 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீசும் கடைசி நேரத்தில், பந்து வீசாமல் திரும்பிச் சென்று மீண்டும் பந்து வீசும் யுக்தியை கடைபிடித்தனர். இது கிரிக்கெட்டிற்கு அழகல்ல என்று இங்கிலாந்து பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டேவிட் வில்லே கூறுகையில் ‘‘நான் பேட்டிங் செய்யும்போது அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள இருக்கிறேன் என்று புவனேஸ்வர் தெரிந்து கொண்டார். இதனால் அவர் பந்து வீச்சை நிறுத்திக் கொண்டார். இப்படி சிலமுறை நடைபெற்றது. ஸ்பின்னர்களும் இந்த யுக்தியை கையாண்டனர். அதற்கான விதிகள் உள்ளனவா? என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் அதை விரும்பவிலலை. கிரிக்கெட்டின் உத்வேகத்திற்கு இது தேவையானது என்று நான் நினைக்கவில்லை.

    அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து கருத்து சொல்லும் வேலை என்னுடையதல்ல. தனிப்பட்ட முறையில் இப்படி செய்ய நான் நினைக்கமாட்டேன். இது சிறந்த வழி என்று நினைக்கமாட்டேன்’’ என்றார்.
    இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இந்தியா தொடருக்கு தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.

    பின்னர் முக்கியத்தும் வாய்ந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இந்த பேட்ஸ்மேனுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது பிராட்டிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘தலைசிறந்த ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பல்வேறு ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு முழங்காலில் ஏற்பட்டுள்ள தசைநார் பிரச்சினைக்கு சில ஊசிகள் போட்டுள்ளேன். எனக்கு ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. அதன்பிறகு ஓட திட்டமிட்டுள்ளேன். 22-வந்தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

    ஒருவேளை கவுன்ட்டி போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டால் இந்திய தொடரில் பிராட் விளையாடுவது சிக்கலை ஏற்படுத்தும்.
    விராட் கோலி இன்றைய போட்டியிலாவது இரண்டாயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை உறுதி செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. #ViratKohli
    இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று உள்ளது. இதற்கு முன் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டியில் விளையாடியது. இரண்டிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

    அயர்லாந்து தொடருக்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டி20 போட்டியில் 1983 ரன்கள் எடுத்திருந்தார். 17 ரன்கள் எடுத்தால் 2000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்ற நிலை இருந்தது.

    ஆனால், முதல் போட்டியில் டக்அவுட் ஆன கோலி, 2-வது ஆட்டத்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2000 ஆயிரம் ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கிடையில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2000 ரன்களை கடந்து 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.



    விராட் கோலி 2000 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 8 ரன்கள் தேவையுள்ளது. இதனால் இங்கிலாந்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்திலாவது 2000 ரன்னை எட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டியில் 0, 9 அடித்ததன் மூலம் விராட் கோலியின் சராசரி 50-ற்கு கீழ் குறைந்துள்ளது.
    ஆஸ்திரேலியா போன்று எங்களை சாதாரணமாக எடை போடாதீர்கள் என்று மோர்கனுக்கு விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார். #ENGvIND
    ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சென்று ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இங்கிலாந்தின் அபார ஆட்டத்திற்கு ஆஸ்திரேலியாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6 போட்டியிலும் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. தற்போது இந்தியா தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாட இருக்கிறது.

    டி20 தொடரின் முதல் ஆட்டம் மான்செஸ்டரில் இன்றிரவு 10 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் எங்களை ஆஸ்திரேலியாவை போல் சாதாரணமாக எடை போடாதீர்கள் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘எங்களுடைய திறமை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. உண்மையிலேயே எங்கள் வீரர்களுக்கு எராளமான டி20 போட்டியில் விளையாடிய அனுபவம் உண்டு. ஐபிஎல் தொடருக்குப்பின் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டியில் சிறப்பாக விளையாடினோம். அணி சிறப்பானதாக உள்ளது.



    எங்களை ஆஸ்திரேலியா போன்று எடை போட வேண்டாம். எங்களுக்கு இங்கிலாந்து கடும் சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இது மிகவும் சிறந்த தொடராக இருக்கும். முக்கியமான தருணத்தில் நாம் வெற்றி பெற்றால் எதுவேண்டுமென்றாலும் நடக்கலாம்’’ என்றார்.
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறது. #ENGvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. மான்செஸ்டரில் நடைபெறும் இரு அணிகளும் பலப்ரீட்சை நடத்துகின்றன.

    இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் இருக்கிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் 5-0 எனஒயிட் வாஷ் செய்தது. ஒரேயொரு டி20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றது. மேலும், இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலானது.

    காயம் காரணமாக வேகப்பந்து வீரர் பும்ரா, தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், குருணால் பாண்டியா இடம் பெற்றுள்ளனர். இருவரும் ஐபிஎல் தொடரில் முத்திரை பதித்தவர்கள்.

    கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், டோனி, கேஎல் ராகுல், ரெய்னா, ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்கள். பந்துவீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் முத்திரை பதிக்க கூடியவர்கள். 11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு கோலிக்கு கடும் கவாலாக இருக்கலாம். ரெய்னா- ராகுல் இடையே ஆடும் லெவனில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவும்.



    இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன், ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பட்லர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை 11 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 ஆட்டத்திலும், இங்கிலாந்து 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் 3 டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், ரெய்னா, டோனி, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்த்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், கேஎல் ராகுல், குருணால் பாண்டியா, தீபக் சாஹர்.

    இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ், பட்லர், பேர்ஸ்டோவ், மொயீன் அலி, ஜேக் பால், சாம் குர்ரான், டாம் குர்ரான், ஜோர்டான், பிளங்கெட், அடில் ரஷீத், டேவிட் வில்லே.
    கட்டை விரல் முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஐந்து டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் இந்தியா 2-0 என எளிதாக வெற்றி பெற்றது.

    இந்நிலையில், அந்த தொடரின்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.



    பும்ராவுக்கு அயர்லாந்து அணியுடனான இரண்டாவது போட்டியின்போது இடதுகை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. வாஷிங்டன் சுந்தருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது.

    பும்ராவிற்குப் பதில் தீபக் சாஹர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பான வகையில் பந்து வீசினார். மேலும், தற்போது நடைபெற்று வரும் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் அசத்தி வருகிறார். இதனால் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. #JaspritBumrah #WashingtonSundar #BCCI #INDvENG #ENGvIND
    இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசிய அர்ஜூன் தெண்டுல்கர் ரவி சாஸ்திரியிடம் முத்தான டிப்ஸ்களை பெற்றுள்ளார். #ArjunTendulkar
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர். 18 வயதான இவர் முதன்முறையாக 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். U-19 இந்திய அணி ஜூலையில் இலங்கைக்கு எதிராக இரண்டு நான்கு நாள் போட்டியிலும், ஐந்து ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. இதில் இரண்டு நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணியில் அர்ஜூன் தெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார்.

    தற்போது இந்திய சீனியர் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்திய அணி நேற்று தனது முதல் பயிற்சி செசனை தொடங்கியது. அப்போது அர்ஜூன் தெண்டுல்கர் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசினார்.



    அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியிடம் முத்தான டிப்ஸ்களை பெற்றுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரான பிசிசிஐ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கான பயிற்சி முகாம் தரம்சாலாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் தெண்டுல்கர் கலந்து கொண்டார்.
    இங்கிலாந்து தொடருக்காக தயாராகும்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி பயப்பட்டார் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய அணி கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது இந்திய அணியில் விராட் கோலி இடம்பிடித்திருந்தார். அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சராசரி 13.40. இந்த தொடருக்கு பின் வீறுகொண்டு எழுந்த விராட் கோலி தற்போது தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

    இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் கோலி உள்ளார். இந்த தொடருக்கு முன்னோட்டமாக கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தார். இதற்கு தயாராகி வரும்போது, ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகினார். தற்போது 100 சதவிகிதம் உடற்தகுதி பெற்றுள்ள அவர், இங்கிலாந்து சென்றுள்ளார்.

    இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும்போது விராட் கோலிக்கு பயம் இருந்தது என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘விராட் கோலி தலைசிறந்த வீரர். இந்த தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இங்கிலாந்து தொடருக்கு முன் அவர் கவுன்ட்டி போட்டியில் விளையாடாதது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கவுன்ட்டி போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தார். ஏனென்றால், கடந்த முறை  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத பயம் அவரிடம் இருந்ததாக நினைக்கிறேன்.

    இந்திய அணி தொடரை கைப்பற்ற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து நல்ல ஃபார்மில் உள்ளது. இது மிகவும் சவாலான தொடராக இருக்கும்’’  என்றார்.
    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா தொடரை வெல்ல அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என இயன் சேப்பல் கூறியுள்ளார். #ENGvIND
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரை சிறப்பாக முடித்து வெளிநாட்டு தொடர்களில் விளையாட தொடங்கியுள்ளது. முதல் தொடராக தென்ஆப்பிரிக்கா சென்றது. அதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 இழந்தது.

    விரைவில் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு தொடர்களையும் இந்தியா கைப்பற்ற அபூர்வ வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகரும் ஆன இயன் சேப்பல் கூறியுள்ளார்.

    இதுகுறித்து இயன் சேப்பல் கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி தொடரைக் வெல்ல அரிய வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்டில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஹெட்டிங்லேயில் வெற்றி பெற்றது. அந்த அணி சீரான நிலைத்தன்மையுடன் இல்லாமல் உள்ளது.



    தற்போது இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவது தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அலஸ்டைர் குக்கின் இரண்டு இரட்டை சதங்கள் அவருடைய உண்மையான முகத்தை மறைக்க முடியாது. கடந்த 12 மாதங்களில் 29 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 19 முறை 20 ரன்களுக்கு கீழ் எடுத்து்ளளார். 10 முறை ஒற்றையிலக்க ரன்னாகும்.

    தொடக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், எதிரணி பந்து வீச்சாளர்கள் புதுப்பந்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நிலைத்து நின்று விளையாட விடமாட்டார்கள்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா எப்போதும் சிறப்பாக விளையாடியது கிடையாது.

    ஆனால், இந்த முறையை நிச்சயம் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி அசைக்க முடியாத தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து குறித்து கங்குலி கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடரில் இந்தியா வெற்றி பெறும் என எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாதிரி, உத்வேகத்தை பெற்றால், வெற்றி நமக்கே. பாகிஸ்தானை விட இந்தியா சிறந்த அணி. இதனால் இந்தியா தொடரை வெல்ல சிறப்பான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.



    மேலும், சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறுித்து கூறுகையில் ‘‘அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவன் விளையாடியதை நான் பார்த்தது இல்லை. அவன் சிறப்பாக விளையாடுவான் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    ×