என் மலர்

  செய்திகள்

  இந்திய டெஸ்ட் தொடருக்குள் தயாராகி விடுவேன்- ஸ்டூவர்ட் பிராட் நம்பிக்கை
  X

  இந்திய டெஸ்ட் தொடருக்குள் தயாராகி விடுவேன்- ஸ்டூவர்ட் பிராட் நம்பிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இந்தியா தொடருக்கு தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND
  இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.

  பின்னர் முக்கியத்தும் வாய்ந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இந்த பேட்ஸ்மேனுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் கடந்த வாரம் கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது பிராட்டிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘தலைசிறந்த ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பல்வேறு ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு முழங்காலில் ஏற்பட்டுள்ள தசைநார் பிரச்சினைக்கு சில ஊசிகள் போட்டுள்ளேன். எனக்கு ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. அதன்பிறகு ஓட திட்டமிட்டுள்ளேன். 22-வந்தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

  ஒருவேளை கவுன்ட்டி போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டால் இந்திய தொடரில் பிராட் விளையாடுவது சிக்கலை ஏற்படுத்தும்.
  Next Story
  ×