search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England vs India"

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மோதும் இந்திய அணி டி20 தொடரை போல ஒருநாள் போட்டி தொடரையும் வெல்லுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ENGvIND #TeamIndia
    லீட்ஸ்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    3 ஒருநாள் போட்டியில் நாட்டிங்காமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியசத்திலும், லண்டனில் நடந்த 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 86 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நாளை (17-ந்தேதி) நடக்கிறது.

    20 ஓவர் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. 20 ஓவர் தொடரை இழந்ததால் ஒருநாள் தொடரையாவது வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையில் இங்கிலாந்து இருக்கிறது.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. ஒருநாள் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஏமாற்றம் காணப்பட்டது. தொடக்க ஜோடியான ரோகித் சர்மா-தவானின் ஆட்டத்தை பொறுத்தே அணியின் ரன் குவிப்பு இருக்கும். இதில் தவான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதேபோல ராகுலும் அதிரடியாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

    இங்கிலாந்து தொடரில் தினேஷ் கார்த்திக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. நாளைய ஆட்டத்திலாவது கேப்டன் கோலி வாய்ப்பு வழங்குவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    பந்துவீச்சில் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 ஆட்டத்தில் 9 விக்கெட் எடுத்துள்ளார். மற்றொரு சுழற்பந்து வீரர் யசுவேந்திர சாஹல் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பும்ரா இல்லாததால் வேகப்பந்தில் பலவீனம் காணப்படுகிறது.

    இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் ஜோரூட், ஜேசன் ராய் ஆகியோரும், பந்துவீச்சில் டேவிட் வில்லி, ஆதில் ரஷீத் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 99-வது போட்டியாகும். இதுவரை நடந்த 98 ஆட்டத்தில் இந்தியா 40-ல், இங்கிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 3 போட்டி முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    குல்தீப் யாதவ் 6 விக்கெட் வீழ்த்திய போதிலும் பென் ஸ்டோக்ஸ், பட்லர் அரைசதங்களால் இந்தியாவிற்கு 269 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி  பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் 32 மாதங்களுக்குப் பிறகு சுரேஷ் ரெய்னாவும், 10 மாதங்களுக்குப் பிறகு கேஎல் ராகுலும் இடம்பிடித்தனர். வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் அறிமுகமானார்.

    ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இங்கிலாந்து பவர் பிளேயான முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் குவித்தது.

    இதனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்ந நிலையில்தான் 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்த நிலையில் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

    13-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட்டையும், 5-வது பந்தில் பேர்ஸ்டோவ்-ஐயும் எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதன் மூலம் 10 பந்தில் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து ரன் குவிப்பிற்கு தடைபோட்டார். தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதனால் இங்கிலாந்து அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினார். 5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த பட்லர் மிரட்டலாக விளையாடினார். ஜோஸ் பட்டர் 45 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய பட்லர் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.



    மறுமுனையில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 102 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த கையோடு குல்தீப் யாதவ் பந்தில் வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் விக்கெட் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை சாய்த்தார். அதோடு மட்டுமல்லாமல் டேவிட் வில்லியே விக்கெட்டையும் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 10 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

    அதன்பின் வந்த மொயீன் அலி 23 பந்தில் 24 ரன்களும், அடில் ரஷித் 16 பந்தில் 22 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் இந்தியாவிற்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. உமேஷ் யாதவ் 9.5 ஓவர்கள் வீசி 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். சாஹல் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
    அதிரடி பேட்ஸ்மேன் ஆன சுரேஷ் ரெய்னா 32 மாதங்கள் கழித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். #ENGvIND #Raina
    இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. 31 வயதான இவர் 2005-ல் ஒருநாள் போட்டியில் முதன்முதலாக இந்திய அணியில் அறிமுகமானார். சுழற்பந்து வீசுவதுடன் தனது அதிரடி பேட்டிங்கால் குறுகிய காலக்கட்டத்திலேயே சிறந்த பேட்ஸ்மேனாக வளர்ச்சியடைந்தார். டி20 போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    திடீரென இவரது ஆட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை.



    அதன்பின் தீவிர பயிற்சிக்குப்பின் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பிடித்தார். இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைத்துள்ளது.

    இதன்மூலம் 32 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் இடம்பிடித்துள்ளார். இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்கிடைக்க வாய்ப்புள்ளது. சுரேஷ் ரெய்னா 223 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5 சதத்துடன் 5568 ரன்கள் அடித்துள்ளார்.



    அதேபோல் கேஎல் ராகுல் 10 மாதங்கள் கழித்து அணியில் இடம்பிடித்துள்ளார். சித்தார்த் கவுல் அறிமுகமாகியுள்ளார்.
    இந்தியாவிற்கு எதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ் விலகியுள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

    இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் இங்கிலாந்து வீரர்கள் கடும் பயிற்சி மேற்கொண்டனர். வலைப் பயிற்சியின்போது இங்கிலாந்து அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் ஆன அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு காயம் ஏற்பட்டது.



    இதனால் இன்றைய போட்டியில் அவர் களம் இறங்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்துள்ள ஹேல்ஸ்க்குப் பதிலாக தாவித் மலன் அழைக்கப்பட்டுள்ளார். #ENGvIND #INDvENG #AlexHales
    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடர் முடிந்துள்ள நிலையில் நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டி20 தொடரை இந்தியா 2-1 எனக் கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    ஒருநாள் மற்றும் டி20 தொடரைக் காட்டிலும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் யார் வெற்றி பெறுவார்? என்ற எதிர்பார்ப்புதான் அதிகமாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் குல்தீப் யாதவ் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று முன்னாள் ஆஸ்திரேலியாவின் ரிஸ்ட் ஸ்பின்னரும், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் வர்ணனையாளராக செயல்பட இருப்பவரும் ஆன பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் ஹாக் கூறுகையில் ‘‘இந்திய சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் விதவிதமான மாறுபட்ட பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். நான் டெஸ்ட் போட்டியில் அவரை உறுதியாக தேர்வு செய்வேன்.

    குல்தீப் யாதவ் அதிக அளவில் ஸ்டம்பை தாக்கும் வகையில்தான் பந்து வீசுகிறார். அவருடைய குயிக்-ஆர்ம் ஆக்சன் பேட்ஸ்மேன்களுக்கு சவாலானதாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் இறங்கி வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, தற்போதைய பந்து வீச்சைவிட சற்று கூடுதல் வேகத்தை வெளிப்படுத்த வேண்டும். இது பேட்ஸ்மேன்கள் பந்தை பலமாக தூக்கி அடிப்பதை தடுக்கும்’’ என்றார்.
    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்ஸ்மேன் செய்ய வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இலங்கையில் நடைபெற்ற தொடரின்போது இந்திய அணி பல்வேறு பரிசோதனை செய்தது. அப்போது கேஎல் ராகுல், கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரகானே ஆகியோரை நான்காவது இடத்தில் களமிறக்கியது.

    ஆனால் எந்த வீரரும் அந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை. இங்கிலாந்திற்கு எதிராக டி20 தொடரில் கேஎல் ராகுலை 3-வது இடத்தில் களமிறக்கி கோலி 4-வது இடத்தில் களமிறங்கினார். இதற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது. கேஎல் ராகுல் முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கோலி கடைசி இரண்டு போட்டியில் தலா 40 ரன்களுக்கு மேல் அடித்தார்.

    இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘டி20 தொடரை பார்த்தீர்கள் என்றால், பேட்டிங் வரிசை சரியாக அமைந்ததாக நான் நினைக்கிறேன். கேஎல் ராகுல் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் களம் இறங்கி விளையாடியதால், பேட்டிங்கில் இருந்து வந்த பிரச்சனை தீர்ந்ததாக நினைக்கிறேன்.

    ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு இதுபோன்று களம் இறங்குவது சிறப்பானதாக அமையும் என்பது என்னுடைய ஒட்டுமொத்த நம்பிக்கை. விராட் கோலி ஒருநாள் தொடரில் இந்த எண்ணத்தோடுதான் களம் இறங்குவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    பிரிஸ்டோலில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து. #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. இதனால் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமானார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

    இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள்.

    முதல் ஓவரை அறிமுக வீரர் தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 3 பவுண்டரிகள் விரட்டினார். அடுத்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி விரட்டினார். உமேஷ் யாதவ் வீசிய 4-வது ஓவரில் ராய் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் துரத்தினார்.



    6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஒவரில் ராய் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி விரட்டினார். ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் விட்டுக்கொடுக்க இங்கிலாந்து 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் குவித்தது.

    சாஹல் வீசிய 7-வது ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்சருக்கு தூக்கி 23 பந்தில் அரைசதம் அடித்தார் ராய். 8-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் பட்லர் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சாஹர் வீசிய 10-வது ஓவரில் ராய் 31 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 9.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்திருந்தது.



    அதன்பின் வந்த ஹேல்ஸ் (30) மோர்கன் (6), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோரை ஹர்திக் பாண்டியா வீழ்த்த இங்கிலாந்து ஸ்கோரில் சற்று வேகம் குறைந்தது. இருந்தாலும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.  இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

    இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 ஓவரில் 38 விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். சித்தார்த் கவுல் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், சாஹர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. சாஹர் அறிமுகமாகியுள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி இரவு 6.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.



    இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார். குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டிற்குப் பதில் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் தொடரை வெல்வது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    நாட்டிங்காம்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் மான்செஸ்டரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்திலும், கார்டியாவில் நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இருக்கிறது.

    முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் 2-வது ஆட்டத்தில் சொதப்பிவிட்டனர். தொடரை வெல்ல முக்கியமான போட்டி என்பதால் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும்.

    ரோகித் சர்மா, தவான் ஜோடியின் தொடக்கம் சிறப்பாக இருந்தால் மட்டுமே அதிகமான ரன்களை குவிக்க இயலும். முதல் போட்டியில் சாதித்த ராகுல், குப்தீல் யாதவ் ஆகியோர் 2-வது போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

    இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இரு அணிகளும் இன்று மோதுவது 14-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 13 போட்டியில் இந்தியா 6, இங்கிலாந்து 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சோனி சிக்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #T20 #ENGvIND #TeamIndia
    இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறுவது குறித்து மோர்கன் உறுதியாக ஏதும் கூறவில்லை. #ENGvIND
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ஹாம்ஸ்ட்ரிங் காயத்தால் ஆஸ்திரேயாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் முழுவதும் விளையாடாத பென் ஸ்டோக்ஸ், இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை.

    அதேவேளையில் துர்காம் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 68 பந்தில் 90 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்காரணமாக இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

    ஆனால், ஆடும் லெவனில் அவருக்கு இடம் கொடுக்கப்படுமா? என்பது குறித்து கேப்டன் மோர்கன் உறுதியான தகவலை வெளிப்படுத்தவில்லை. இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘அடுத்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைகிறார். அவர் ஒரு சிறந்த வீரர். அவர் அணியில் இடம்பெறுவாரா? என்பது குறித்து முடிவு எடுப்பது கடினமானது.



    கடந்த காலங்களில் இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளோம். வலுவான ஆடும் லெவன் அணிக்கு எது தேவையோ, அதற்கான முடிவை நாங்கள் எடுப்போம்’’ என்றார். இதனால் பென் ஸ்டோக்ஸ் இந்தியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகமே?
    குல்தீப் யாதவ் பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொண்டதே, மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முத்தரப்பு டி20- கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது போட்டி கார்டிஃபில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

    முதலில் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது. ஆனால் மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றிய குல்தீப் யாதவ், 4 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

    இங்கிலாந்து வீரர்கள் குல்தீப் யாதவின் பந்து வீச்சை சிறப்பாக கையாண்டு ரன்கள் குவித்துவிட்டனர். இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இன்றைய (நேற்று) ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் குல்தீப் யாதவ் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். இது மிடில் ஆர்டர் ஓவரின்போது மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அவர்கள் குல்தீப் யாதவை எப்படி எதிர்கொள்வது என்று வீட்டுப்பாடம் எடுத்து, அதை சிறப்பாக செயல்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் இருந்து மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும்.



    மூன்று விக்கெட்டுக்களை விரைவாக இழந்த பின்னர் அதில் இருந்து மீள்வது கடினமானது. இங்கிலாந்து வீரர்கள் சரியான இடத்தில் பந்தை வீசியது எங்களை மோசமான ஷாட்டுகள் ஆட வைத்துவிட்டது. நான் இன்னும் 10 முதல் 15 ரன்கள் எடுத்திருக்கனும். 149 ரன்கள் என்பது போட்டி கொடுக்கக்கூடிய ரன்னாக இருக்கும் நினைத்தோம். ஆனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விட்டார்கள்’’ என்றார்.
    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன எம்எஸ் டோனி சர்வதேச அளவில் 500 போட்டிகளில் விளையாடியுள்ளார். #MSDhoni
    இந்திய தேசிய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இவர் தலைமையிலான இந்திய அணி மூன்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 2004-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்த எம்எஸ் டோனி இன்று தனது 37-வது வயதை பூர்த்தி செய்துள்ளார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறது.

    நேற்று கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் எம்எஸ் டோனி இடம் பிடித்திருந்தார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து போட்டிகளையும் சேர்த்து 500-வது சர்வதேச போட்டியாகும். இதன்மூலம் 500 சர்வதேச போட்டியில் விளையாடிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.



    இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 664 போட்டிகளிலும், டிராவிட் 509 போட்டிகளில் விளையாடியுள்ளனர். எம்எஸ் டோனி 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். #Sachin #Dravid
    ×