search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப் யாதவை இங்கிலாந்து சிறப்பாக எதிர்கொண்டது தோல்விக்கு காரணம்- விராட் கோலி
    X

    குல்தீப் யாதவை இங்கிலாந்து சிறப்பாக எதிர்கொண்டது தோல்விக்கு காரணம்- விராட் கோலி

    குல்தீப் யாதவ் பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொண்டதே, மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட முத்தரப்பு டி20- கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது போட்டி கார்டிஃபில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.

    முதலில் இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது. ஆனால் மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றிய குல்தீப் யாதவ், 4 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

    இங்கிலாந்து வீரர்கள் குல்தீப் யாதவின் பந்து வீச்சை சிறப்பாக கையாண்டு ரன்கள் குவித்துவிட்டனர். இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இன்றைய (நேற்று) ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் குல்தீப் யாதவ் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். இது மிடில் ஆர்டர் ஓவரின்போது மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அவர்கள் குல்தீப் யாதவை எப்படி எதிர்கொள்வது என்று வீட்டுப்பாடம் எடுத்து, அதை சிறப்பாக செயல்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் இருந்து மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும்.



    மூன்று விக்கெட்டுக்களை விரைவாக இழந்த பின்னர் அதில் இருந்து மீள்வது கடினமானது. இங்கிலாந்து வீரர்கள் சரியான இடத்தில் பந்தை வீசியது எங்களை மோசமான ஷாட்டுகள் ஆட வைத்துவிட்டது. நான் இன்னும் 10 முதல் 15 ரன்கள் எடுத்திருக்கனும். 149 ரன்கள் என்பது போட்டி கொடுக்கக்கூடிய ரன்னாக இருக்கும் நினைத்தோம். ஆனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விட்டார்கள்’’ என்றார்.
    Next Story
    ×