search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் ரவி சாஸ்திரியிடம் முத்தான டிப்ஸ்களை பெற்றார் அர்ஜூன் தெண்டுல்கர்
    X

    இங்கிலாந்தில் ரவி சாஸ்திரியிடம் முத்தான டிப்ஸ்களை பெற்றார் அர்ஜூன் தெண்டுல்கர்

    இங்கிலாந்தில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசிய அர்ஜூன் தெண்டுல்கர் ரவி சாஸ்திரியிடம் முத்தான டிப்ஸ்களை பெற்றுள்ளார். #ArjunTendulkar
    இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்ற அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் தெண்டுல்கர். 18 வயதான இவர் முதன்முறையாக 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். U-19 இந்திய அணி ஜூலையில் இலங்கைக்கு எதிராக இரண்டு நான்கு நாள் போட்டியிலும், ஐந்து ஒருநாள் போட்டியிலும் விளையாடுகிறது. இதில் இரண்டு நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணியில் அர்ஜூன் தெண்டுல்கர் இடம்பிடித்துள்ளார்.

    தற்போது இந்திய சீனியர் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்திய அணி நேற்று தனது முதல் பயிற்சி செசனை தொடங்கியது. அப்போது அர்ஜூன் தெண்டுல்கர் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்களுக்கு பந்து வீசினார்.



    அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியிடம் முத்தான டிப்ஸ்களை பெற்றுள்ளார். இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரான பிசிசிஐ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கான பயிற்சி முகாம் தரம்சாலாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் அர்ஜூன் தெண்டுல்கர் கலந்து கொண்டார்.
    Next Story
    ×