search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India england tour"

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா எப்போதும் சிறப்பாக விளையாடியது கிடையாது.

    ஆனால், இந்த முறையை நிச்சயம் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி அசைக்க முடியாத தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து குறித்து கங்குலி கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடரில் இந்தியா வெற்றி பெறும் என எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாதிரி, உத்வேகத்தை பெற்றால், வெற்றி நமக்கே. பாகிஸ்தானை விட இந்தியா சிறந்த அணி. இதனால் இந்தியா தொடரை வெல்ல சிறப்பான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.



    மேலும், சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறுித்து கூறுகையில் ‘‘அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவன் விளையாடியதை நான் பார்த்தது இல்லை. அவன் சிறப்பாக விளையாடுவான் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் சாதிக்க இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் அறிவுரை தெரிவித்துள்ளார். #GlennMcGrath ViratKohli #INDvENG

    புதுடெல்லி:

    இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி-20 போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 3-டி-20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்த போட்டிகளுக்காக தயாராகும் வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடுவதாக இருந்தது. ஆனால், ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய கால அவகாசம் தேவைப்படுவதால் அவர் கவுண்டி போட்டியில் பங்கேற்கவில்லை. கோலி, தற்போது பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 

    இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் சாதிக்க, அங்குள்ள தன்மைக்கு ஏற்ப கோலி விரைவாக மாறுவது மிகவும் அவசியம் என முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். 



    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கோலி இப்போது மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். தரமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இங்கிலாந்து நிலைமைகள் மிகவும் கடினமானவை. ஆண்டர்சன் போன்ற ஒரு சிறந்த பந்துவீச்சாளர் இருக்கும் போது, ​​அது எதிரணிக்கு கடினமான வேலை இருக்கும். நீங்கள் கடுமையாக உழைக்க தயாராக இருக்க வேண்டும். கோலி ஒரு தரம் வாய்ந்த வீரர், எனவே ஒரு நல்ல போட்டியை காண காத்திருக்கிறேன்.

    எப்போதும் உங்கள் சிறந்த பேட்ஸ்மேன் சரியாக விளையாட வேண்டும். இது, மற்ற பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கும், இந்திய அணியில் சில தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர், இந்திய அணியில் சில தரமான வீரர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை ஒரு வீரரை நம்பி இருந்தால் அவர்கள் தவறு செய்கிறார்கள்.

    நிறைய விசயங்கள் வீரர்கள் எப்படி தன்மைக்கு ஏற்ப மாறுகிறார்கள் என்பதை சார்ந்துள்ளது என நினைக்கிறேன். இந்த நாட்களில் நீங்கள் விரைவாக தன்மைக்கு ஏற்ப மாற வேண்டும். என் காலத்தில், இரண்டு அல்லது மூன்று வெளிநாட்டு போட்டிகள் தான் கிடைக்கும். எனவே நாங்கள் மிக விரைவாக தன்மைக்கு ஏற்ப மாற வேண்டும். வெளிப்படையாக, உண்மையில் நிலைமைகள் பயன்படுத்த போதுமான வெளிநாட்டு போட்டிகள் எங்களுக்கு கிடைப்பதில்லை. நாங்கள் கடந்த கால அனுபவத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GlennMcGrath ViratKohli #INDvENG
    ×