search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார் செய்தது கிரிக்கெட்டிற்கு அழகல்ல- இங்கிலாந்து வீரர்
    X

    குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார் செய்தது கிரிக்கெட்டிற்கு அழகல்ல- இங்கிலாந்து வீரர்

    முதல் டி20 போட்டியின்போது குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் செய்த காரியங்கள் கிரிக்கெட்டிற்கு அழகல்ல என டேவிட் வில்லே தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 3-ந்தேதி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. லோகேஷ் ராகுல் அதிரடி சதத்தால் இந்தியா 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீசும் கடைசி நேரத்தில், பந்து வீசாமல் திரும்பிச் சென்று மீண்டும் பந்து வீசும் யுக்தியை கடைபிடித்தனர். இது கிரிக்கெட்டிற்கு அழகல்ல என்று இங்கிலாந்து பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லே தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து டேவிட் வில்லே கூறுகையில் ‘‘நான் பேட்டிங் செய்யும்போது அவரது பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள இருக்கிறேன் என்று புவனேஸ்வர் தெரிந்து கொண்டார். இதனால் அவர் பந்து வீச்சை நிறுத்திக் கொண்டார். இப்படி சிலமுறை நடைபெற்றது. ஸ்பின்னர்களும் இந்த யுக்தியை கையாண்டனர். அதற்கான விதிகள் உள்ளனவா? என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. நான் தனிப்பட்ட முறையில் அதை விரும்பவிலலை. கிரிக்கெட்டின் உத்வேகத்திற்கு இது தேவையானது என்று நான் நினைக்கவில்லை.

    அவர்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து கருத்து சொல்லும் வேலை என்னுடையதல்ல. தனிப்பட்ட முறையில் இப்படி செய்ய நான் நினைக்கமாட்டேன். இது சிறந்த வழி என்று நினைக்கமாட்டேன்’’ என்றார்.
    Next Story
    ×