search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ENGvIND T20 Series"

    இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறது. #ENGvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. மான்செஸ்டரில் நடைபெறும் இரு அணிகளும் பலப்ரீட்சை நடத்துகின்றன.

    இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் இருக்கிறது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியில் 5-0 எனஒயிட் வாஷ் செய்தது. ஒரேயொரு டி20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றது. மேலும், இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலானது.

    காயம் காரணமாக வேகப்பந்து வீரர் பும்ரா, தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், குருணால் பாண்டியா இடம் பெற்றுள்ளனர். இருவரும் ஐபிஎல் தொடரில் முத்திரை பதித்தவர்கள்.

    கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், டோனி, கேஎல் ராகுல், ரெய்னா, ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர்கள். பந்துவீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் முத்திரை பதிக்க கூடியவர்கள். 11 பேர் கொண்ட வீரர்கள் தேர்வு கோலிக்கு கடும் கவாலாக இருக்கலாம். ரெய்னா- ராகுல் இடையே ஆடும் லெவனில் இடம்பிடிக்க கடும் போட்டி நிலவும்.



    இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கன், ஜேசன் ராய், பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பட்லர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை 11 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 ஆட்டத்திலும், இங்கிலாந்து 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் 3 டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், ரெய்னா, டோனி, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்த்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், கேஎல் ராகுல், குருணால் பாண்டியா, தீபக் சாஹர்.

    இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ், பட்லர், பேர்ஸ்டோவ், மொயீன் அலி, ஜேக் பால், சாம் குர்ரான், டாம் குர்ரான், ஜோர்டான், பிளங்கெட், அடில் ரஷீத், டேவிட் வில்லே.
    ×