search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineer"

    • மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    மேட்டூர்:

    ேசலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு சொந்தமான குடியிருப்பு மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த நகைகள், பணம் கொள்ளை போய் இருந்தது. இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்பு துலக்கி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் பல்வேறு சாலை திட்டப்ப ணிகள் நடைப்பெற்று வருகிறது. இப்பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத்துறை மூலம் சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒப்பந்த தாரர்க ளிடம் சாலை பணிகளையும், புறவழிச் சாலை பணிகளை யும், பாலப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கி னார்.

    இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர் தாரகேஸ்வ ரன், உதவி பொறியாளர் மற்றும் சாலை பணியின் ஒப்பந்ததாரர்கள் மேற்பார்வை ஆலோசகர்க ளும் உடன் இருந்தனர்.

    • வீட்டை பூட்டி விட்டு ஒரத்தநாட்டில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு திருவிழாவிற்காக சென்றுள்ளனர்.
    • ரூ. 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை யாகப்பாசாவடியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 45). இவர் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை பூட்டி விட்டு ஒரத்தநாட்டில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு திருவிழாவிற்காக சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் மனோகரன் மாமனார் மற்றும் மாமியார் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது அறையில் வைக்கப்பட்டி ருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டது தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் மனோகரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார்.
    • ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமராக்ஷன். இவரது மகன் அசோக், மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி அபிலாஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அசோக் படித்து முடித்ததும் இங்கிலாந்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார். அப்போது விமானிக்கான பயிற்சி எடுத்து கொண்டார். பின்னர் பிரிட்டிஷ் சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்றார்.

    அதன்பின்பு அசோக்குக்கு சொந்தமாக விமானம் தயாரிக்க ஆசை ஏற்பட்டது. கொரோனா லாக்-டவுன் காலத்தில் விமானம் தயாரிக்கும் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார்.

    இதற்காக பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுரைகளை படித்து விமானம் தயாரிப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். தொடர்ந்து அதனை தயாரிக்கும் பணியை தொடங்கினார்.

    அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார். இதற்கு ஒரு கோடியே 26 லட்சம் செலவானது. விமான தயாரிப்பு முடிந்ததும் அதனை முறையான அனுமதி பெற்று ஓட்டி பார்த்தார். அதிலும் வெற்றி கிடைக்க அந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடித்தார்.

    இதையடுத்து அந்த விமானத்திற்கு தனது மகள் தியாவின் பெயரை சூட்டினார். பின்னர் அசோக் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓய்வு நாட்களில் உலகம் சுற்ற தொடங்கினார். சொந்த காரில் சுற்றுலா செல்வது போல சொந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் பறக்க தொடங்கினார்.

    ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார். இதனை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

    பெரும் தொழில் அதிபர்கள் மட்டுமே சொந்தமாக விமானம் வைத்துள்ள நிலையில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் சொந்தமாக அவரே விமானம் தயாரித்து அதில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

    • இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த என்ஜினீயரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • பட்டதாரியான இவர் பல இணைய தளங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மடத்துப்பட்டியை சேர்ந்தவர் சுவேதா கார்த்திக். பட்டதாரியான இவர் படிப்புக்கேற்ற வேலை தேடி வந்துள்ளார். அதற்காக பல இணையதளங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.

    இந்த நிலையில் மங்கம் மாள்பாளையத்ைத சேர்ந்த பாலமுருகன் என்பவர் சுவேதாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்ப்பதாகவும், தன்னால் வெளிநாட்டில் வேலை வாங்கி தரமுடியும் என்றும் கூறியுள்ளார்.

    மேலும் தனது போட்ேடா அடையாள அட்டை உள்ளிட்டஆவணங்களை செல்போனில் அனுப்பி உள்ளார். அைத பார்த்து நம்பிய சுவேதா அவரிடம் வேலை தொடர்பாக விவரம் கேட்டுள்ளார்.

    அப்போது தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் சிங்கப்பூர் கிளையில் பணி வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பணியை பெற ரூ.2 லட்சம் செலவாகும் என்றும் கூறி உள்ளார்.

    இதையடுத்து 2 தவணைகளில் ரூ.2 லட்சத்தை பாலமுருகனின் வங்கி கணக்குக்கு சுவேதா வுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேலைக்கான பணி ஆணையை பால முருகன் அனுப்பி வைத்து உள்ளார்.

    அதில் பணி மற்றும் சம்பள விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுகுறித்து பால முருகனிடம் சுவேதா விவரம் கேட்டார். அப்போது மேலும் ரூ.2 லட்சம் தேவைப்படும் என்றும், பணத்தை செலுத்திய பின்பு நிறுவனத்தில் இருந்து முறையான அழைப்பு வரும் என்று பாலமுருகன் கூறியுள்ளார். பணி ஆைண வந்து விட்டதால் வேலை உறுதி என நம்பிய சுவேதா மீண்டும் ரூ.2 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார்.

    ஆனால் நிறுவனத்தில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுவேதா அது தொடர்பாக பாலமுரு கனை தொடர்பு கொண்டார். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசி உள்ளார். அதன் மூலம் பாலமுருகன் தன்னை ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார் என்பது சுவேதாவுக்கு தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைவாங்கி தருவதாக இளம்பெண்ணை ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த பாலமுருகனை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் ரெயில்வே என்ஜினீயரிடம் வழிப்பறி செய்ா 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 39). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். மதுரை ெரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரேம்குமார் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது குடிபோதையில் இருந்த 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து தகராறு செய்தனர். அப்போது அவரது செல்போன் கீழே விழுந்து உடைந்தது.

    மேலும் அந்த வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பிரேம்குமார் வேறு வழியின்றி அவர்களிடம் ஆயிரம் ரூபாயை ெகாடுத்தார். அதை வாங்கி கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக தல்லா குளம் போலீசில் பிரேம் குமார் புகார் கொடுத்தார். இந்த புகார் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் கவனத்திற்கு சென்றது. இதில் தொடர் புடைய குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

    அதன்படி மதுரை மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆகியோர் மேற்பார்வையில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி, சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பிரேம்குமாரிடம் வழிப்பறி செய்த வாலிபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் வழிப்பறி செய்தவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் முல்லை நகருக்கு சென்றனர். அங்கு நேருஜி தெருவில் பதுங்கி இருந்த 3 வாலிபர்களையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முல்லை நகர், நேருஜி தெரு, சண்முக சுந்தரம் மகன் தினேஷ் குமார் என்ற மாணிக்கம் (22), அவரது சகோதரர் கணேசன் (24), செக்கானூ ரணி செந்தில்குமார் மகன் சந்துரு (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

    • கேரளாவை சேர்ந்த பலர் குழந்தைகளுக்கு எதிரான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது.
    • தனிப்படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    மேலும் சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களையும் சிலர் பரப்பி வந்தனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

    இதில் கேரளாவை சேர்ந்த பலர் குழந்தைகளுக்கு எதிரான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணைய தளத்தில் வெளியிட்டது, அவற்றை பலருக்கும் பகிர்ந்தது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    மேலும் இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடிவந்தனர். இதற்காக ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சாப்ட்வேர் என்ஜினீயர் உள்பட 12 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மெமரி கார்டுகள், செல்போன்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது.

    • 2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடந்த 2 மாதங்களாக வேலை ஏதும் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்

    போரூர்:

    மதுரவாயல், அடுத்த அடையாளம்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடப்பதாக மதுரவாயல் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் ஆகியோர் விரைந்து சென்று சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எம்.பி.ஏ பட்டதாரியான ரிஷி(23), என்ஜினீயரிங் பட்டதாரிகளான ரூபஸ்(23), அவினாஷ்(26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 மாதங்களாக வேலை ஏதும் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். இன்ஸ்டாகிராம் நண்பர் ஒருவர் மூலம் கோய முத்தூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து நண்பர்கள் மூலம் விற்பனை செய்து வருவதும் விசார ணையில் தெரிய வந்துள்ளது.

    • நிலநடுக்கத்தில் விஜய்குமார் தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி இருந்தது.
    • விஜய்குமார் மாயமாகி இருப்பது குறித்து துருக்கியில் உள்ள இந்திய நாட்டு தூதரகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    பெங்களூரு:

    துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியா எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான் டெப் நகரத்தில் கடந்த 6-ந் தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

    பெங்களூரு பீனியாவில் உள்ள நைட்ரஜன் தயாரிக்கும் நிறுவனத்தில் என்ஜினீயராக விஜய்குமார் (வயது 36) என்பவர் பணியாற்றி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் இவரது பூர்வீகம் ஆகும். இவர், பணியாற்றும் நிறுவனம் துருக்கி நாட்டிலும் புதிதாக நிறுவனத்தை தொடங்க உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் துருக்கியில் நடைபெற்று வருகிறது.

    அந்த கட்டிட பணிகளை கண்காணிப்பதற்காக என்ஜினீயர் விஜய்குமார், பெங்களூருவில் இருந்து துருக்கிக்கு சென்றிருந்தார்.

    இந்நிலையில், கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விஜய்குமார் தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி இருந்தது. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விஜய்குமார் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

    அவர் கடந்த 5-ந் தேதி கடைசியாக தன்னுடைய குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி இருந்தார். அதன்பிறகு, விஜய்குமாரை குடும்பத்தினரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிலநடுக்கத்திற்கு பின்பு விஜய்குமார் மாயமாகி இருப்பதால், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    விஜய்குமாரை மீட்டு கொடுக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய்குமார் மாயமாகி இருப்பது குறித்து துருக்கியில் உள்ள இந்திய நாட்டு தூதரகத்திற்கு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    விஜய்குமார் தங்கி இருந்த ஓட்டலில் மீட்பு பணிகள் நடந்து வருவது பற்றி தகவல் கிடைத்திருப்பதாகவும், அதன் பின்னரே விஜய்குமார் பற்றிய தகவல் தெரியவரும் என்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் சித்தப்பா கூறியுள்ளார்.

    • வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் என்ஜினீயர் பால்ராஜ் இல்ல திருமண விழா நடந்தது.
    • மணமகன் வீட்டார் சார்பில் சண்முகம் யாதவ்-சாந்தி, கஜேந்திரன் யாதவ்-இந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வெங்க டேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளரும், அரசு முதல் நிலை ஒப்பந்ததாரருமான என்ஜினீயர் பால்ராஜ் -சந்திரகலா மகள் ரேடியாலஜி மருத்துவ நிபுணர் டாக்டர் சிந்துஜா பால்-க்கும், சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம் யாதவ்- சாந்தி மகன் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சரத்குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் இன்று காலை ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் மகாலில் நடந்தது.

    மணவிழாவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில்வாகனன், வி.எம்.அன் கோ நிறுவனர் என்ஜினீயர் வேலு மனோகரன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள், சமுதாய தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழத்தினர்.

    திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை என்ஜினீயர் பால்ராஜ்-சந்திரகலா மற்றும் வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் இயக்குநர் டாக்டர் வெங்கட்ராஜ் பால். வெங்கடேஸ்வரா பியூல்ஸ், எண்டர் பிரைசஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் மணமகன் வீட்டார் சார்பில் சண்முகம் யாதவ்-சாந்தி, கஜேந்திரன் யாதவ்-இந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.

    • வேல்ராணி தனது தாயாருடன் வசித்து வருகிறார்.
    • வேல்ராணி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சீவலப்பேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் மணி மகள் வேல்ராணி ( வயது 40). இவர் மாற்றுத் திறனாளி. திருமணமாகாத இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டிற்கு அருகில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து மின் சப்ளை கொடுக்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் வேல்ராணி யின் சகோதரி ராஜலெட்சுமியின் மகன் அஜெய்செல்வனை, அதே ஊரை சேர்ந்த ரங்கேஷ் தாக்கியதாக வேல்ராணி தரப்பினர் களக்காடு போலீசில் புகார் செய்தனர்.

    இதனையறிந்த ரங்கேஷின் நண்பரான பணகுடி பேரூராட்சியில் என்ஜினீயராக உள்ள சரவணனின் தந்தை முத்துபாண்டி, வேல்ராணியின் உறவினரிடம் சென்று வேல்ராணி வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கினால் மின் வாரியத்தினர் அபராதம் விதித்து விடுவார்கள் என்பதால் மின் இணைப்பை துண்டிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து வேல்ராணியின் வீட்டி ற்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து வேல்ராணி, முத்துபாண்டியிடம் சென்று மின் இணைப்பை துண்டிக்க செய்து விட்டீர்களே என்று தட்டிக் கேட்டார். அப்போது அங்கு வந்த சரவணன் எனது தந்தையிடம் தகராறு செய்கிறாயா என்று கூறி வேல்ராணியை கம்பால் தலையில் தாக்கினார்.

    இதில் காயமடைந்த வேல்ராணி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வாடிப்பட்டி, சமயநல்லூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதேபோல் சமயநல்லூர், தனிச்சியம் பீடரில் பராமபரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வாடிப்பட்டி, அங்கப்பன் கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டி க்கரடு, பெருமாள்பட்டி, பூச்சம்ப ட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிப்பட்டி, சி.புதூர், வடுகப்பட்டி, கள்வேலி ப்பட்டி, தனிச்சியம், ஆல ங்கொட்டாரம், திருமால் நத்தம்.

    கொண்டையம்பட்டி, நடுப்பட்டி, கீழக்கரை, மேல சின்னணம்பட்டி, கோவில்பட்டி, தனிச்சியம் பிரிவு, வடுகப்பட்டி, கட்டக்குளம், ராயபுரம், மேட்டுநீரேத்தான், எல்லையூர், டி. மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயணபுரம் ராமகவுண்டன்பட்டி பகுதிகள்.

    சத்தியமூர்த்தி நகர், தோடனேரி, திருவாலவாயநல்லூர், வைரவநத்தம், விட்டங்குளம், ஆனைக்குளம், சித்தாலங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    ×