search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Shock"

    • கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    கொருக்குப்பேட்டை ஆர்.கே. நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகன் கவின் (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்றார்.

    அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நடந்து வரும் வழியில் கோவிலில் சீரியல் பல்பு கட்டுவதற்கு கட்டப்பட்டிருந்த கட்டையில் கை வைத்துள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவ உப்பளத் தொழிலாளி இசக்கி அர்ஜூன் (வயது20).
    • நேற்று வழக்கம் போல உப்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது இசக்கி அர்ஜூனை மின்சாரம் தாக்கியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி 3 சென்ட் அமுதா நகரை சேர்ந்தவர் இசக்கி அர்ஜூன் (வயது20). இவர் அப்பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியான பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல உப்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக ஊழியர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தானமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி எரிந்ததால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள புதுப்பட்டு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு மேட் மற்றும் சீட் தயாரிக்கும் தனியார் கம்பெனிகளில் இருந்து வரும் கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்யப்படு கிறது.

    இந்த தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி பற்றி எரியத் தொடங்கியது. இதனை கண்டு அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.

    தொழிற்சாலையில் இருந்த குடோனில் தீ பரவியதால் அங்கிருந்த சுமார் 300 டன் எடை கொண்ட சீட் மற்றும் மேட் தயாரிக்க மறுசுழற்சி செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்த மூலப் பொருட்களும், மறு சுழற்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களும் பற்றி எரிந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரியும் எரிந்தது.

    இதனால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. அருகில் உள்ள புதுப்பட்டு, சாத்தமை, மலைப்பாளையம், அன்டவாக்கம், வேடவாக்கம், வேடந்தாங்கல், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகை ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது.

    தீவிபத்து பற்றி அறிந்ததும் மதுராந்தகம், செய்யூர், அச்சரைப்பாக்கம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் பற்றி எரிந்த தால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    சுமார் 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீணை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொழிற்சாலையில் தீப்பற்றியதும் அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார்
    • திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார். இவர் தனது மெத்தை வீட்டில் மாடியில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன. அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தார். தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது.
    • சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பார்த்திபன் (வயது 28) விவசாயி, சம்பவத்தன்று இவரது மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் அதே கிராமத்தில் நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மின் கம்பியில் தவறுதலாக கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி பார்த்திபன் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
    • திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கீர்த்தனா (வயது30).

    இவர் துணி துவைத்து விட்டு அதனை வீட்டின் வெளியே காய வைத்தார். அருகில் இருந்த கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

    இதுபற்றி அறிந்ததும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதித்தனர். ஆனால் கீர்த்தனா ஏற்கனவே மின்சாரம் தாக்கியதில் இறந்து இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த இரட்டை புளியம்மரத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழன் (32). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கொள்ளுகாட்டு மேட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வெல்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தமிழன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரும்பு கொக்கியை எடுத்து தேங்காய் பறிக்க முயன்றுள்ளார்.
    • அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 50 ).இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் (45 ) என்பவர் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தோட்டத்தில் இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கொக்கியை எடுத்து தேங்காய் பறிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் இரும்பு கம்பி பட்டதில் குமார் மீது மின்சாரம் தாக்கியது.

    இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் வயலுக்கு வேலைக்கு சென்றார்.
    • வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி (வயது55), விவசாயி.

    இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதனால் பூச்சிப்பாண்டி தனது மனைவியுடன் வசித்து வந்தார். மேலும் விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் நேற்று வயலுக்கு வேலைக்கு சென்றார்.

    வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், மாலையில் அவர் வேலை பார்த்த விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பூச்சிப்பாண்டி மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பூச்சிப்பாண்டியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விவசாயி பூச்சிப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வயலில் இருந்த மோட்டார் சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மது போதையில் இருந்த அண்ணாமலை அதே பகுதி துலுக்காத்தம்மன் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென ஏறினார்.
    • மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு போராடிய அண்ணாமலையை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணை அருண் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது45). இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். அண்ணாமலை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

    இந்த நிலையில் மது போதையில் இருந்த அண்ணாமலை அதே பகுதி துலுக்காத்தம்மன் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென ஏறினார்.

    அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மின்சாரம் பாய்ந்து ெ பண் உயிரிழந்தார்
    • மாடு மேய்த்த போது நடந்த சம்பவம்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே உள்ள பாலக்குடிப்பட்டியை சேர்ந்தவர் அரங்கன் மனைவி சிட்டு (வயது 53). பாலக்குடிப்பட்டி வயல்வெளியில் நேற்று மாடு மேய்த்துள்ளார். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை சிட்டு மித்தபோது, மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர்.
    • லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே தொண்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் லோகிதாஸ்(28) தொழிலாளி. பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாமல் அவர்கள் சிரமப்படுவதை பார்த்த அவர் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வீட்டிலிருந்து மின்ஒயரை தெருவுக்கு எடுத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். உடனே லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகிதாஸ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×