பகண்டை கூட்டு ரோடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர். லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பகண்டை கூட்டு ரோடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
Published on

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே தொண்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் லோகிதாஸ்(28) தொழிலாளி. பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாமல் அவர்கள் சிரமப்படுவதை பார்த்த அவர் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வீட்டிலிருந்து மின்ஒயரை தெருவுக்கு எடுத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். உடனே லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகிதாஸ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com