search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கியது"

    • புள்ளியம்மாள் என்பவர் ஓடி வந்து மூர்த்தியை காப்பாற்றுவதற்கு முயன்றார்.
    • மின்கம்பியில் இருந்து வந்த அதிக மின்அழுத்தம் காரணமாக வண்டியின் டயர் முழுவதும் எரிந்து நாசமாகியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முள்ளேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகன் மூர்த்தி (வயது28). சம்பவத்தன்று மூர்த்தி மோட்டார் சைக்கிளில் சித்தேரி பகுதிக்கு சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் குறுக்கே சென்ற மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. அந்த கம்பி மூர்த்தி ஓட்டி சென்ற வண்டியின் மீது விழுந்ததால் அவர் பலத்த காயமடைந்த வலியால் அலறினார். இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்தவர் புள்ளியம்மாள் என்பவர் ஓடி வந்து மூர்த்தியை காப்பாற்றுவதற்கு முயன்றார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து காயமடைந்தார்.

    அந்த மின்கம்பியில் இருந்து வந்த அதிக மின்அழுத்தம் காரணமாக வண்டியின் டயர் முழுவதும் எரிந்து நாசமாகியது.

    காயமடைந்த 2 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் அரூர் போலீஸ் நிலையத்தில் சித்தேரி பகுதியில் சரியான பரமரிப்பு இல்லாத காரணத்தினால் மின்வயர்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் பாய்ந்து ெ பண் உயிரிழந்தார்
    • மாடு மேய்த்த போது நடந்த சம்பவம்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே உள்ள பாலக்குடிப்பட்டியை சேர்ந்தவர் அரங்கன் மனைவி சிட்டு (வயது 53). பாலக்குடிப்பட்டி வயல்வெளியில் நேற்று மாடு மேய்த்துள்ளார். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை சிட்டு மித்தபோது, மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வல்லத்திராகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர்.
    • லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே தொண்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் லோகிதாஸ்(28) தொழிலாளி. பொங்கல் பண்டிகையை ஒட்டி லோகிதாசின் குடும்பத்தினர் இரவு நேரம் வீட்டின் முன்பு கோலம் போட்டனர். அப்போது போதிய வெளிச்சம் இல்லாமல் அவர்கள் சிரமப்படுவதை பார்த்த அவர் மின் விளக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வீட்டிலிருந்து மின்ஒயரை தெருவுக்கு எடுத்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். உடனே லோகிதாசை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகிதாஸ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப் பாக்கம் சக்தி நகரை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது 27). இவர் பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை கடையை திறந்துள்ளார். அப்போது கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தினார்.

    அதில் மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் சதாம் உசேன் மீது எதிர்பாராத விதமாக மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.

    அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவர் பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதாம் உசேன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கம்பியை அப்புறப்படுத்தியபோது மின்சாரம் பாய்ந்தது
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அருகே கீழாண்டமோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத், கூலிதொழிலாளி. இவரது இரண்டா வது மகள் நிவேதா (வயது 15) அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நிவேதா நேற்று மாலை வீட்டின் மாடியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சென்று போடும் போது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின் வயர் மீதுபட்டது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த நிவே தாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமிர்தலிங்கம் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார்.
    • ஓடிவந்த பெற்றோர் அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நல்லாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 40). இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் அமிர்தலிங்கம் வீடு கட்டும் போது கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். மேலும் இவரது மனைவி அஞ்சலாட்சம் இவர்களுக்கு அன்பரசன் (9) அறிவழகன் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அமிர்தலிங்கம் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    அந்த வீட்டிற்கு தற்சமயம் மின்சார வயர் மூலம் மின் பல்ப் போட்டுள்ளார். இன்று காலை அந்த வீட்டிற்குள் அவரது பையன் அறிவழகன் சென்றான். அப்போது எதிர்பாராத விதமாக அறிவழகன் மின்சார வயர் மீது மிதித்தான். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். அவனது சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அறிவழகனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அறிவழகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறிவழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அமிர்தலிங்கம் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புது வீட்டில் மகன் மின்சாரம் தாக்கி பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

    ×