மின்சாரம் தாக்கி சிக்கன் கடைக்காரர் பலி

கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பரிதாபம் போலீசார் விசாரணை
மின்சாரம் தாக்கி சிக்கன் கடைக்காரர் பலி
Published on

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பனப் பாக்கம் சக்தி நகரை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது 27). இவர் பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று மாலை கடையை திறந்துள்ளார். அப்போது கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தை பயன்படுத்தினார்.

அதில் மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் சதாம் உசேன் மீது எதிர்பாராத விதமாக மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அவர் பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதாம் உசேன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com