search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drunkenness"

    • குழந்தைசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • அப்போது தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த விறகை எடுத்து சக்திவேல்ராஜாவை தாக்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் வசிப்பவர் சக்திவேல்ராஜா, (வயது 54) சமையல் மாஸ்டர்.

    இவர் நேற்று இரவு தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (48). கட்டிட கூலி வேலை செய்பவர் சக்திவேல்ராஜா, குழந்தைசாமியிடம், தனக்கு வேலை எதாவது கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்.

    குழந்தைசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அப்போது தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த விறகை எடுத்து சக்திவேல்ராஜாவை தாக்கினார்.

    இதனால் சக்திவேல்ராஜா பலத்த காயமடைந்த நிலையில் குமாரபாளையம் அரச ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து சக்திவேல்ராஜா குமார–பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் பேரில் வழக்குப்–பதிவு செய்து குழந்தைசாமி போலீசார் கைது செய்தனர்.

    • தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார்.
    • இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12வது ஆண்டு விழா வரும் ஜனவரி 15-ந்தேதி தைப்பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். அந்த டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெரு ராஜி என்பவர் இந்த பேனரை குடிபோதையில் கிழித்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • சிங்கம்புணரியில் குடிபோதையில் சிக்கிய நபரிடம் ரூ.90 ஆயிரம் பணம்-கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சமத்துவபுரம் அருகே கோட்டை வேங்கைபட்டி ரோட்டில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது மதுரை மாவட்டம் கொடுக்கம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாண்டி(வயது50) என்பதும், குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.அப்போது அவரிடம்

    ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 500 கிராம் கஞ்சா இருந்தது. அதுகுறித்து கேட்ட போது சரியாக தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அவர் வைத்திருந்த பணம் மற்றும் கஞ்சா பற்றி போலீசார் விசாரித்தனர். குடிபோதையில் இருந்ததால் அவரிடம் இருந்து எந்த தகவலையும் போலீசாரால் பெற முடியவில்லை. கஞ்சா வுடன் சிக்கி இருப்பதால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம் என்றும், அவர் வைத்திருந்த பணம் கஞ்சா விற்ற பணமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.

    அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார்.
    • ராமலிங்கம் மனைவி முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் தெரி வித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கீழ கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 62) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். மேலும் ராமலிங்கத்திற்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு தன் வீட்டிற்கு வந்தார். அப்போது போதையில் இருந்த ராமலிங்கம் நிலை தடுமாறி வீட்டு வாசலில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடி ஏற்பட்டது. இதைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் ராம லிங்கத்தை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராமலிங்கம் மனைவி முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.
    • ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் (வயது 57).இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவரும் இவரது மனைவி மஞ்சுளா (50). ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்துபோ திண்டிவனம் போலீஸ் நிலையம் எதிரில் வந்து கொண்டிருக்கும்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஆட்டோ ராஜவேல் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து.

    இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தலைமையாசிரியர் ராஜவேல், அவரது மனைவி மஞ்சுளா, ஆட்டோவில் பயணம் செய்த ராஜன் தெருவைசேர்ந்த யாகவல்லி, ஆட்டோ டிரைவர் வேங்கை பகுதியை சேர்ந்த பாஸ்ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்றனர். மேலும் ஆட்டோ டிரைவர் பாஸ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து விட்டார். இதுகுறித்து திண்டி வனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது.
    • அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் மந்தக்கரை சிவசக்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் கவரிங் வேலை பார்த்து வந்தார். இவருக்கு முன்னதாகவே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த குடிப்பழக்கத்தால் செல்வராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். மேலும் குடிப்பதற்கு பணம் இல்லாததாலும் குடும்ப பிரச்சினை காரணமாகவும் மன உளைச்சலில் இருந்து வந்த செல்வராஜ் நேற்று வீட்டில் இருந்த கவரிங் நகை தொழிலுக்காக வைக்கப்பட்டிருந்த சைனைடை சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்வராஜ் மனைவி காமாட்சி சிதம்பரம் நகர போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சரளாவை முடியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • உறவினர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது‌.

    கடலூர்:

    கடலூர் அருகே பில்லாலியை சேர்ந்தவர் சரளா (வயது 28). இவர் அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது சந்திரகிரி என்பவர் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று சரளாவை முடியை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தட்டி கேட்க சென்ற அவர்களது உறவினர்களுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது‌. இது குறித்து சரளா கொடுத்த புகாரின் பேரில் சந்திரகிரி மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதர்சனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வல்லம்:

    தஞ்சை ரெட்டிபாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை புலிவலம் காந்திநகரை சேர்ந்த நீலவானன் என்பவரின் மகள் சுடர்மணி (29) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அனைவரும் தஞ்சை வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்துள்ளனர். தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுதர்சன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுதர்சனுக்கு குடி பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு குடித்து விட்டு வந்த சுதர்சனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் இதனை பார்த்த சுதர்சன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுடர்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுடர்மணியின் தந்தை நீலவானன் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது குறித்து தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று சுடர்மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விழுப்புரத்தில் குடிபோதையில் நிதிநிறுவன ஊழியரை நண்பர்கள் கொலை செய்தனர்.
    • டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமை யில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு பள்ளிசந்து குப்புசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மரிய பிரபாகரன் (வயது 23). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார்  இவர் விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனியில் உள்ள ஆஸ்பத்திரி அருகில் முட்புதறில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து விழுப்புரம் டவுன்போலீ சார் வழக்கு பதிவு செய்தனர். டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமை யில் 3 தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குடி போதையில் நண்பர்களே மரிய பிரபாகரனை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விழுப்புரம் பவர்ஆபீஸ்ரோடு தெற்குகாலனியை சேர்ந்த பாலமணி (வயது 23), முத்துமாரி யம்மன்கோவில் தெருவை சேர்ந்த குகன் (24), விழுப்புரம் பானாம்பட்டு பாதை அரவிந்தர் நகரை சேர்ந்த வல்லரசு (23) ஆகி யோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவர்களில் குகன், வல்ல ரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலை மறைவான பாலமணியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தீபா ரோஸ்லின் பிரசவத்திற்காக, தாய் வீட்டுக்கு சென்றார்.
    • தாக்குதலில் காயம் அடைந்த சகோதரிகள் இருவரும் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில், மது போதை யில், மனைவி மற்றும் குடும்பத்தாரை தாக்கிய கணவர் மீது மனைவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் கீழையூரை சேர்ந்தவர் தீபா ரோஸ்லின் (வயது25). இவருக்கும், கீழ்மாத்தூர் சங்கர் (28) என்பவருக்கும், கடந்த சில ஆண்டு களுக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கு முன், தீபா ரோஸ்லின் பிரசவத்திற்காக, தாய் வீட்டுக்கு சென்றார். குழந்தை பிறந்ததும், சங்கர் அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதத்திற்கு முன், சங்கர் மாமியார் வீட்டு க்கு வந்து தங்கி விட்டார். ஆனால், வேலை எதற்கும் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போடு வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 17-ந் தேதி வீட்டு சமையலுக்காக ஏதாவது வாங்கி வருமாறு சங்கரிடம் தீபா ரோஸ்லின் சொல்லியுள்ளார். அதன்படி வெளியே சென்ற சங்கர் மாலை 6 மணிக்குதான் வீட்டுக்கு சென்றுள்ளார். ஏன் தாமதம் என மனைவி தீபா ரோஸ்லின் கேட்டபோது, நீ என்ன என்னை கேள்வி கேட்பது என சண்டை போட்டதோடு, மனைவியை தாக்கியுள்ளார். தடுக்க வந்த மனைவியின் சகோதரி தீபிகாவையும் கத்தியால் குத்தியுள்ளார். மேலும் தீபா ரோஸ்லின் தந்தை, பாட்டி ஆகியோரையும் சங்கர்தாக்கினார். தாக்கு தலில் காயம்அடைந்த சகோதரிகள் இருவரும் காரைக்கால்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.அவர்கள் கொடு த்த புகாரின் பேரில், திரு.பட்டினம்போலீசார் வழக்கு பதிவுசெய்து சங்கரை தேடிவருகின்றனர்.

    • குடிபோதையில் வந்த கணவனை மனைவி திட்டியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வசனாங்குப்பம் சேர்ந்தவர் வீராசாமி (வயது 58).விவசாயி. சம்பவத்ன்று குடித்துவிட்டு வீராசாமி வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது அவரது மனைவி சுமதி குடிபோதையில் வந்த கணவர் வீராசாமியை திடீரென்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீராசாமி விஷம் குடித்து மயக்க நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் வீராசாமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை பகுதியில் குரும்பாலூர், குரும்பாலூர் ஏரிக்கரை உள்ளிட்ட மலை கிராம பகுதியில் சாராயம் காய்ச்சுவதாகவும், விற்பதாகவும் கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்பி பகலவன் உத்தரவின்பேரில் கச்சிராய பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மேற்பார்வையில் கரியாலூர் சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சாராய ரெய்டு செய்தனர்.

    கரியாலூர் 5 சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தலைமை காவலர் மாரியப்பன் உள்ளிட்ட போலீசார் குரும்பாலூர் மற்றும் ஏரிக்கரை பகுதியில் சாராய ரெய்டு செய்தனர்.

    அப்போது 4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, அருணாசலம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    ×