திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சுதர்சனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வல்லம்:

தஞ்சை ரெட்டிபாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 32). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை புலிவலம் காந்திநகரை சேர்ந்த நீலவானன் என்பவரின் மகள் சுடர்மணி (29) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அனைவரும் தஞ்சை வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்துள்ளனர். தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுதர்சன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுதர்சனுக்கு குடி பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு குடித்து விட்டு வந்த சுதர்சனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த மனைவி சுடர்மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் இதனை பார்த்த சுதர்சன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுடர்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுடர்மணியின் தந்தை நீலவானன் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது குறித்து தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று சுடர்மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com