search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banner tearing"

    • டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ கிழித்துள்ளனர்.
    • மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே கோலியனூர் கடைவீதியில் பா.ம.க. சார்பில் மாநில வன்னியர்சங்க தலைவர் காடுவெட்டி குரு பிறந்தநாளையொட்டி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ கிழித்துள்ளனர்.  இன்று காலை அங்கு சென்ற பா.ம.க.வினர் பேனர் கிழிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். சிறிதுநேரத்தில் அந்த பகுதியில் பாட்டாளி இளைஞர் சங்கத்தினர், வன்னியர்சங்கத்தினர் மற்றும் பா.ம.க.வினர் ஏராள மானோர் திரண்டனர்.

    அவர்கள் மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.   தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்தனர். அங்கு திரண்ட பா.ம.க.வினரிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவி த்தனர். இதனை த்தொடர்ந்து பா.ம.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். என்றாலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார்.
    • இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12வது ஆண்டு விழா வரும் ஜனவரி 15-ந்தேதி தைப்பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நகரமன்ற உறுப்பினர் சலீம் டிஜிட்டல்பேனர் அமைத்திருந்தார். அந்த டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்டிருந்தது.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் பண்ருட்டி போலீஸ் லைன் 3-வது தெரு ராஜி என்பவர் இந்த பேனரை குடிபோதையில் கிழித்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து தலைமறைவான ராஜியை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×