என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விழுப்புரத்தில் குடிபோதையில் நிதிநிறுவன ஊழியரை கொன்ற நண்பர்கள்- பரபரப்பு தகவல்கள்
  X

  விழுப்புரத்தில் குடிபோதையில் நிதிநிறுவன ஊழியரை கொன்ற நண்பர்கள்- பரபரப்பு தகவல்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விழுப்புரத்தில் குடிபோதையில் நிதிநிறுவன ஊழியரை நண்பர்கள் கொலை செய்தனர்.
  • டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமை யில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

  விழுப்புரம்:

  விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு பள்ளிசந்து குப்புசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மரிய பிரபாகரன் (வயது 23). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் இவர் விழுப்புரம் வடக்கு ரெயில்வே காலனியில் உள்ள ஆஸ்பத்திரி அருகில் முட்புதறில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து விழுப்புரம் டவுன்போலீ சார் வழக்கு பதிவு செய்தனர். டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமை யில் 3 தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குடி போதையில் நண்பர்களே மரிய பிரபாகரனை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விழுப்புரம் பவர்ஆபீஸ்ரோடு தெற்குகாலனியை சேர்ந்த பாலமணி (வயது 23), முத்துமாரி யம்மன்கோவில் தெருவை சேர்ந்த குகன் (24), விழுப்புரம் பானாம்பட்டு பாதை அரவிந்தர் நகரை சேர்ந்த வல்லரசு (23) ஆகி யோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இவர்களில் குகன், வல்ல ரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலை மறைவான பாலமணியை போலீசார் தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×