குடி போதையில் தகராறு;  சமையல் மாஸ்டர் காயம்

குழந்தைசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த விறகை எடுத்து சக்திவேல்ராஜாவை தாக்கினார்.
குடி போதையில் தகராறு;    சமையல் மாஸ்டர் காயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுந்தரம் நகர் பகுதியில் வசிப்பவர் சக்திவேல்ராஜா, (வயது 54) சமையல் மாஸ்டர்.

இவர் நேற்று இரவு தன் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (48). கட்டிட கூலி வேலை செய்பவர் சக்திவேல்ராஜா, குழந்தைசாமியிடம், தனக்கு வேலை எதாவது கிடைக்குமா? என்று கேட்டுள்ளார்.

குழந்தைசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.அப்போது தகராறு ஏற்பட்டு அருகில் இருந்த விறகை எடுத்து சக்திவேல்ராஜாவை தாக்கினார்.

இதனால் சக்திவேல்ராஜா பலத்த காயமடைந்த நிலையில் குமாரபாளையம் அரச ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து சக்திவேல்ராஜா குமார–பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் பேரில் வழக்குப்–பதிவு செய்து குழந்தைசாமி போலீசார் கைது செய்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com