search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிபோதை"

    • சிங்கம்புணரியில் குடிபோதையில் சிக்கிய நபரிடம் ரூ.90 ஆயிரம் பணம்-கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள சமத்துவபுரம் அருகே கோட்டை வேங்கைபட்டி ரோட்டில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது மதுரை மாவட்டம் கொடுக்கம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த பாண்டி(வயது50) என்பதும், குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் போலீசாரின் கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.அப்போது அவரிடம்

    ரூ.90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 500 கிராம் கஞ்சா இருந்தது. அதுகுறித்து கேட்ட போது சரியாக தகவல் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அவர் வைத்திருந்த பணம் மற்றும் கஞ்சா பற்றி போலீசார் விசாரித்தனர். குடிபோதையில் இருந்ததால் அவரிடம் இருந்து எந்த தகவலையும் போலீசாரால் பெற முடியவில்லை. கஞ்சா வுடன் சிக்கி இருப்பதால் கஞ்சா வியாபாரியாக இருக்கலாம் என்றும், அவர் வைத்திருந்த பணம் கஞ்சா விற்ற பணமாக இருக்கலாம் எனவும் தெரிகிறது.

    அது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமணி கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்த மகனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • மனைவி என்றும் கூட பாராமல் இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரமணி (43)/ இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுதாகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ரமணி கடந்த 7-ந் தேதி சென்னையில் இருந்த மகனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த சுதாகர், ரமணியிடம் தகராறில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் வாய்தகராறு அடிதடி சண்டையாக மாறியது. ரமணி மீது சந்தேக மோகத்தால் சுதாகர் மனைவி என்றும் கூட பாராமல் இரும்பு ராடால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ரமணி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து ரமணியை மீட்டு மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு ரமணிக்கு மோசமான நிலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரமணி மரக்காணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய கணவர் சுதாகரை கைது செய்தனர். 

    ×