search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug"

    • போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
    • இந்த சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

    கொழும்பு:

    போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

    5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    நேற்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 19-ம் தேதி நச்சுப்பொருள், அபின், அபாயகர மசோதா சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது. 3 கடைகள் மீதும் மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940-ன்படி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோல் மருந்து கடைகளில் ஆய்வு செய்யப்படும், என்றனர்.

    • பள்ளி பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்த 300 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 2 வாலிபர்களை கைது செய்தனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகர் பகுதியில் குறிப்பாக பள்ளிப்பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தனியார் பள்ளி அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த அஜீஸ் நகரை சேர்ந்த நடராஜ் (22), நேரு மைதான பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (19) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 300 போதை மாத்திரைகள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • போதைப்பழக்கத்தின் தீமைகள், குழந்தைகள் உதவி எண் குறித்து அமைச்சர் கீதாஜீவன் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, மகளிர் பணிபுரியும் நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டி நிறுவுதல் நிகழ்ச்சி மற்றும் உள்ளக புகார் குழு குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து, மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடந்தது.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள், ஆதரவற்ற குழந்தைகள் நலக் காப்பகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளிட்டவற்றை அமைச்சா் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

    பின்னா் அமைச்சா் கூறியதாவது:-

    தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்திருப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அறியாமல் பேசிவருகிறாா். அவருக்கு நடைமுறை தெரியவில்லை. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு சூழ்நிலையை உறுதிப்படுத்த முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    சமூநலத்துறை முறைப்படுத்தப்பட்டு திட்டங்கள் செயல்ப–டுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் மீதான பாலியல் வழக்கில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடங்களுக்குப் பதிலாக 1000 புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

    சட்டமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த கட்டிடங்கள் கட்டப்படும். ராமநாதபுரம் வளரும் பட்டியலில் உள்ளதால் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், அரசுப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இதுவரை இந்த திட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.181 மற்றும் 1098 அழைப்பதன் மூலம் அழைத்தவர்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைப்பதால் இது போன்ற அழைப்புகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளது.

    2015 முதல் 2020 வரை 15 ஆயிரம் அழைப்புகளும், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 16ஆயிரம் அழைப்புகளும் வந்துள்ளன. அனைத்து பள்ளிகளிலும் போதைப் பழக்கத்தின் தீமைகள், கல்வியின் அவசியம், குழந்தைகள் உதவி எண் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை திட்ட அலுவலர் விஷ்வாபதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், முன்னாள் எம்.பி.பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன், கீழக்கரை தி.மு.க.செயலாளர் பஷீர் அகமது, மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார், கவுன்சிலர் சுகைபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • போதையினால் ஏற்படும் தீமைகள் பற்றி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி விளக்கி பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    சங்கரன்கோவில்:

    பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    போதையினால் ஏற்படும் தீமைகள் பற்றி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி விளக்கி பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    முன்னதாக ஆசிரியர் மாரி தங்கம் வரவேற்றார். பேரணி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அழகு மகேஸ்வரி, ஏஞ்சல் மலர் மெரினா, அழகு மகேஸ்வரி, அமுதா ராணி, சிவகாமி, வர்மா, பெர்ஜிலின். கவிதா, அருணா, குருவம்மாள், ஆகியோர் செய்து இருந்தனர். ஆசிரியர் சகாயம் நன்றி கூறினார்.

    • புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்
    • புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் தலைமை தாங்கி பேசுகையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது என்றார்.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஷாஜகான் வரவேற்றார்.

    புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் தலைமை தாங்கி பேசுகையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் உள்ளது. கல்வி மட்டுமே உங்களுக்கு கைகொடுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது ஆகவே போதை பொருட்களை தவிர்த்து நன்கு படித்து சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபராக வரவேண்டும் என்றார்.

    மாணவர்கள் முன்னிலையில் போதை தடுப்பு உறுதி மொழியை சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் வாசிக்க அனைவரும் உறுதி எடுத்து கொண்டனர். பேரணியானது பள்ளியில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு வழியாக புளியங்குடி பேருந்து நிலையம் வந்தடைந்தது. மாணவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் செல்வகுமார், சவுந்திராஜன் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு.

    உடுமலை :

    உடுமலையில் தமிழ்நாடு காவல்துறை, உடுமலை அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை, பொன்விழா குழு, நாட்டு நலப்பணித் திட்ட தேசிய மாணவர் படை, உடுமலை தொழில் வர்த்தக சபை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு உடுமலை டிஎஸ்பி. தேன்மொழி வேல் தலைமை வகித்தார்.

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் துவங்கிய பேரணி எல்லையம்மன் பிரிவு வழியாக குற்றச்சிடல் பழைய பஸ் நிலையம் சென்று புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அப்போது போதை பொருள் தடுப்பு மற்றும் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ,வெங்கடாசலம் மற்றும் போலீசார் ,கல்லூரி பேராசிரியர்கள் , உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மருந்து விலையை குறைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலு வலகம் அருகே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்.

    ஜி.எஸ்.டி.யில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகர ணங்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 5 சதவீதத்தை சுகாதாரத்திற்கு செலவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • கண்காட்சியில் சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சுமார் 30 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
    • இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரங்குகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி-கருத்தரங்கம் பாளை ஆயுதப்படை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    கண்காட்சியை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாணவ-மாணவிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியில் சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சுமார் 30 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரங்குகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    நிகழ்ச்சி தொடர்பாக ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டியில் 46 பேரும், ஓவியப் போட்டியில் 384 பேரும் கலந்து கொண்டனர். அவர்களில் சிறப்பாக பேசியவர்கள் மற்றும் சிறந்த ஓவியம் வரைந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    • போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர காவல் போதை தடுப்பு பிரிவு சார்பில் பனியன் நிறுவனங்களில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாநகர காவல் துணை ஆணையர் அபிநவ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வில், போதைப் பொருளால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து விளக்கப்பட்டு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
    • கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்‌.

    கடலூர்:

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன் சாலையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமைதாங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கலால் உதவி ஆணையர் லூர்துசாமி, கலால் கோட்ட அலுவலர்கள் மகேஷ், ஜெயசீலன், ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருள் கடத்தினால் கடும் தண்டனைக்குரியது என்பதனை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்‌.

    பின்னர் பேரணி அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் முடிவடைந்தது. இதில் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சுப்பையா, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, கலால்த்துறை ஆய்வாளர்கள் பாஸ்கர், வனஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, மகளிர் காவல் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, புனித வளனார் கல்லூரி பேராசிரியர் சந்தானராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.
    • 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு 20 கிலோ மீட்டரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என போட்டிகள் நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என்பதற்காக விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

    அன்று காலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த மாரத்தான் ஓட்டப்ப ந்தயத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து அவரும் கலந்து கொள்கிறார்.

    போட்டிகள் ஆண்கள், மாணவர்கள், பெண்கள் என தனித்தனியாக நடக்கிறது. 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு 20 கிலோ மீட்டரும், 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டரும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என போட்டிகள் நடக்கிறது.

    வெற்றி பெறுப வர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பரிசுகளை வழங்குகிறார். ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிர மும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், சிறப்பு பரிசாக 5 பேருக்கு தலா ரூ.1,000 வீதமும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் உடனடியாக ரூ.300 செலுத்தி https://pmu.edu/dare2022 என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் அன்புராஜ், துணைவேந்தர் வேலுச்சாமி ஆகியோர் தெரிவித்தனர்.

    ×