search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை ஆயுதப்படை வளாகத்தில் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
    X

    சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு கண்காட்சியை காண வந்த பள்ளி மாணவிகள்.

    பாளை ஆயுதப்படை வளாகத்தில் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி

    • கண்காட்சியில் சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சுமார் 30 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
    • இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரங்குகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு கண்காட்சி-கருத்தரங்கம் பாளை ஆயுதப்படை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

    கண்காட்சியை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாணவ-மாணவிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கண்காட்சியில் சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சுமார் 30 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் அரங்குகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    நிகழ்ச்சி தொடர்பாக ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 5 உட்கோட்டங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேச்சுப் போட்டியில் 46 பேரும், ஓவியப் போட்டியில் 384 பேரும் கலந்து கொண்டனர். அவர்களில் சிறப்பாக பேசியவர்கள் மற்றும் சிறந்த ஓவியம் வரைந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    Next Story
    ×