search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்
    X

    விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி.


    புளியங்குடியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்

    • புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்
    • புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் தலைமை தாங்கி பேசுகையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது என்றார்.

    புளியங்குடி:

    புளியங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஷாஜகான் வரவேற்றார்.

    புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் தலைமை தாங்கி பேசுகையில் முதல்-அமைச்சர் உத்தரவுப்படி போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் உள்ளது. கல்வி மட்டுமே உங்களுக்கு கைகொடுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது ஆகவே போதை பொருட்களை தவிர்த்து நன்கு படித்து சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபராக வரவேண்டும் என்றார்.

    மாணவர்கள் முன்னிலையில் போதை தடுப்பு உறுதி மொழியை சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் வாசிக்க அனைவரும் உறுதி எடுத்து கொண்டனர். பேரணியானது பள்ளியில் இருந்து புறப்பட்டு மெயின் ரோடு வழியாக புளியங்குடி பேருந்து நிலையம் வந்தடைந்தது. மாணவர்கள் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் செல்வகுமார், சவுந்திராஜன் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×