search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "donation"

    • அறநிலையத்துறையின் உதவி ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • தங்கம் 47 கிராம், வெள்ளி 3.5 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    அவிநாசி :

    அவிநாசி அருகேயுள்ள மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது.இக்கோவிலில் இந்து அறநிலையத்துறையின் உதவி ஆணையர் செந்தில்குமார் மேற்பார்வையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் 7 லட்சத்து 58 ஆயிரத்து 888 ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது. இதுதவிர தங்கம் 47 கிராம், வெள்ளி 3.5 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் ஆய்வாளர் செல்வபிரியா, செயல் அலுவலர் சந்திர சுந்தரேஸ்வரன், அறங்காவலர் குழு தலைவர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கருவலூர் மாரியம்மன் கோவிலிலும் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 839 ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இது தவிர தங்கம் 44 கிராம், வெள்ளி 202 கிராம் காணிக்கையாக பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தது. மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர் அர்ஜுனன், செயல் அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    • நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்கப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனை.
    • ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அமைக்க ப்படும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு ஏற்றுமதி காப்பீட்டுக் கழகம் சார்பில், ரூ.2 கோடி நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்திற்கு தலைமை வகித்த செய்தி துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதனிடம், ஏற்றுமதி காப்பீட்டுக் கழகத்தின் தலைவர் செந்தில்நாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் ரூ 2 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாபன், பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம், செஞ்சிலுவை சங்க நிர்வாகி தாமோதரன்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏவிபி. கார்த்திகேயன், பல்லடம் ஆறுமுகம், மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோவில் விளங்குகிறது.
    • 72.100 கிராம் தங்கம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் உண்டியல்கள் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் செந்தில்குமாா், ஊத்துக்குளி சரக ஆய்வாளா் ஆதிரை, தக்காா் பெரியமருதுபாண்டியன், செயல் அலுவலா் காளிமுத்து ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் ரூ.16 லட்சத்து 40ஆயிரத்து 701 ரொக்கம், 72.100 கிராம் தங்கம், 60.700 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

    • மதுரை பாலமேட்டில் உள்ள முருகன் கோவிலில் அன்னதானம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை கஜேந்திரன் நாடார் மற்றும் பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    தைப்பூச உற்சவத்தையொட்டி பாலமேடு வேல்முருகன் கோவிலில் பழனி பாதயாத்திரை குழு சார்பில் சாமியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட சாமியார்களுக்கு குருநாதர் கஜேந்திரன், கண்ணன் ஆகியோர் அன்னதானம் வழங்கினர். முன்னதாக கோவிலில் பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சாதுக்களுக்கு வேட்டி வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கஜேந்திரன் நாடார் மற்றும் பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.

    • ஒரு வார கலெக்‌ஷன் 10 ஆயிரத்தை வழங்கினார்
    • இதுவரை 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளதாக பெருமிதம்

    திருச்சி,

    துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆலங்கி ணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி(வயது 73). கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பிரிந்து வந்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். 1980ம் ஆண்டு முதல் தனக்கு யாசகமாக கிடைக்கும் பணத்தை நலிவடைந்த பள்ளி வளர்ச்சிக்கும், பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கும் நன்கொடை யாக கொடுத்து வந்துள்ளார்.கொரோனா கால கட்டத்திற்கு பின்னர் தனக்கு கிடைக்கும் யாகசக பணத்தை அரசு பொது நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டி, தனக்கு யாசகமாக கிடைத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கலெக்டர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து வழங்கினார்.இது குறித்து அவர் கூறும்போது....கடந்த ஒரு வார காலமாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் யாசகம் கேட்டு வந்தேன். ஒரு வார காலத்தில் எனக்கு கிடைத்த 10 ஆயிரம் ருபாய் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்ப்பதற்காக கலெக்டரிடம் வழங்கி உள்ளேன். இது வரை யாசகமாக எனக்கு கிடைத்த 50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வழங்கி உள்ளேன். ஒரு வார காலத்திற்குள் 10 ஆயிரம் ரூபாய் வசூலா என்று உங்களுக்கு ஆச்சர்யம் வரலாம். எனக்கு யாசகமாக கிடைக்கும் உணவு பண்டங்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறேன்.யாசகமாக பெறும் பணத்தை நான் என் சொந்த நலனிற்காக எடுப்பதே இல்லை. இதனை பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளதாலும், யாசகம் பெறும் தொகையினை நற்காரியங்களுக்காக அரசிடம் வழங்குவதாலும் எனக்கு அவர்களாகவே முன்வந்து யாசகம் அளிக்கின்றனர். இனி ஜுன் மாதம் வரை நான் யாசகம் எடுத்து கிடைக்கும் பணம் அனைத்தையும் பள்ளிகளுக்கு வழங்க உள்ளேன் என்று அவர் கூறினார், 

    • சிவகங்கை புத்தகத்திருவிழாவில் 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
    • சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 27-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நி லைப்பள்ளியில் கடந்த 27-ந் தேதி முதல் நடந்து வருகிறது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    புத்தகத்திருவிழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக பெருந்திரள் வாசிப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் கருத்துரை நிகழ்ச்சிகள், மாயாஜாலக் காட்சிகள் நடந்தன.

    இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணை யாகவும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கும், முதியவர்களின் மன அமைதியை சீராக வைத்துக் கொள்வதற்கும் புத்தகங்கள் மற்றும் நூலகங்கள் அடிப்படையாக அமைகிறது. அதனை கருத்தில் கொண்டு, இந்த புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி, அந்த புத்தகங்களை தங்களுக்கு விருப்பமுள்ள நூலகங்களுக்கு வழங்க முன்வரலாம்.

    தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நூலகங்களை தத்தெடுத்தும், பல்வேறு வகையான புத்தகங்களை கிராம நூலகங்கள் மற்றும் பள்ளி நூலகங்களுக்கு வழங்கியும், இந்த புத்தகத்திருவிழாவிற்கு சிறப்பு சேர்த்து வருகின்றனர்.

    தன்னார்வலர்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில், அரசு பள்ளியில் படித்து மருத்துவரான தேவ கோட்டை செந்தில் மருத்து வமனை நிறுவன தலைவர் சிவக்குமார் சார்பில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை இந்தநிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் நன்கொடையாக வழங்கினர்.

    இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் தாமாகவே முன்வந்து தங்களது பங்களிப்பையும் அளிக்கும் வகையில், இந்த புத்தக திருவிழாவின் மூலம் பல்வேறு நூல்களை நூல கங்களுக்கும், பள்ளி களுக்கும் வழங்கி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், நூலகங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்த தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வந்து, சிவகங்கையில் நடைபெறும் புத்தகத்திரு விழாவில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தொடங்கி வைத்தார்.
    • சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொரைஹட்டி கிராமத்தில் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

    விழாவினையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. மேலும், கிராம மக்களின் ஆன்மீக பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.

    நேற்று காலை 10 மணி முதல் 3 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், ஐயனை அழைத்துச் செல்லுதல், முடி இறக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

    தொடர்ந்து, அன்னதான நிகழ்ச்சி நடந்தது. அன்னதான நிகழ்ச்சியை ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் தொடங்கி வைத்தார். முன்னதாக கோவில் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த நிதியாண்டில் பா.ஜ.க. ரூ.1,917 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
    • காங்கிரஸ் கட்சிக்கு ரூ.541 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த 2021-22-ம் நிதியாண்டில், அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஆளுங்கட்சியான பா.ஜ.க. மொத்தம் ரூ.1,917.12 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பெற்றது ரூ.1,033.7 கோடி ஆகும். அக்கட்சியின் செலவினமாக ரூ.854.46 கோடி இருந்துள்ளது.

    அடுத்தபடியாக, காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி நன்கொடை பெற்றது. அதன் செலவுக்கணக்கு ரூ.400.41 கோடியாக இருந்தது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி பெற்ற நன்கொடை ரூ.2.87 கோடியாகவும், செலவு ரூ.1.18 கோடியாகவும் இருந்தது என தெரிவித்துள்ளது.

    • சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
    • குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    காஞ்சிபுரம்:

    கர்ப்பப்பை பிரச்சினைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

    நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தும் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

    பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடியாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கி இருக்கிறார்கள்.

    வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள்.

    அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர்.

    அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆபரேசன் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட நாளில் தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.

    இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

    இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. அதை தவிர்க்க விலை உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும்.

    அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும். பின்னர் ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும்.

    இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.

    தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.

    • தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
    • தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை கோர்ட் சுட்டிக்காட்டியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றலாம் என்றனர்.

    இதையடுத்து உறுப்பு தானம் பெறுவோர் பட்டியலில் அந்த நபர் பதிவு செய்து காத்திருந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை. எனவே அவரது 17 வயதே ஆன மகள், தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார்.

    ஆனால் மருத்துவ சட்டவிதிகளின் படி மைனர் பெண் உறுப்பு தானம் செய்யக்கூடாது. இதனால் டாக்டர்கள், 17 வயது சிறுமியின் உறுப்பை தானமாக பெற மறுத்தனர். இதையடுத்து அந்த சிறுமி, ஐகோர்ட்டில் மனு செய்தார்.

    அதில் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். சிறுமியின் மனுவை பரீசிலித்த கோர்ட்டு சிறுமி அவரது, தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியது.

    தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்க சிறுமிக்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு அவரை பாராட்டவும் செய்தது. தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    மேலும் இதுபோன்ற மகளை பெற அவரது பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் குறிப்பிட்டது.

    • கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் காளியம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து தரும்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியோர்கள், இளைஞர்கள் எஸ்.அய்யாத்துரைப் பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.
    • அப்போது ஊத்துமலை இளைய ஜமீன் குமரேச ராஜா, அய்யாத்துரைப் பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, வக்கீல் வைரமுத்து, பேரவை செயற்குழு உறுப்பினர் பூலோக ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    தென்காசி:

    கடையநல்லூர் அருகே உள்ள பால அருணாசலபுரம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளி யம்மன் கோவிலுக்கு கோபுரம் அமைத்து தரும்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியோர்கள், இளை ஞர்கள் அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.அய்யாத்துரைப் பாண்டியனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று அருணாசலபுரத்தை சேர்ந்த மூக்கையா, மகேஷ், கணேசன், மாடசாமி, ஆறுமுகசாமி, வேல்முருகன், மகேஷ், சாமி மாரிமுத்து, வேல் ராஜ், முத்துக்குமார், சாமித்துரை, கண்ணன்,அரவிந்த், ஆகியோர்கள் முன்னிலையில் அந்த சமுதாய நாட்டாண்மை மாதவனிடம் கோபுரம் அமைப்பதற்கான நன்கொடையினை எஸ்.அய்யாதுரை பாண்டியன் வழங்கினார். அப்போது ஊத்துமலை இளைய ஜமீன் குமரேச ராஜா, அய்யாத்துரைப் பாண்டியன் பேரவை தலைவர் பழனிச்சாமி, வக்கீல் வைரமுத்து, பேரவை செயற்குழு உறுப்பினர் பூலோக ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் சங்க விவசாயிகள் சுமார் 100 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மற்றும் மாத்திரைகளை இலவசமாக பெற்றுச் சென்றனர்.

    நாமக்கல்:

    அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

    முகாமை நாமக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் தொடங்கி வைத்தார். முகாமில் கூட்டுறவுச்சங்கங்களைச் சேர்ந்த 46 பேர்கள் பங்கேற்று ரத்ததானம் அளித்தனர். இதே போல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான பொது மருத்துவ முகாம் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்றது.

    முகாமில் சங்க விவசாயிகள் சுமார் 100 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மற்றும் மாத்திரைகளை இலவசமாக பெற்றுச் சென்றனர். மேலும் முகாமில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    ×