என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலமேடு முருகன் கோவிலில் அன்னதானம்
- மதுரை பாலமேட்டில் உள்ள முருகன் கோவிலில் அன்னதானம் நடந்தது.
- விழா ஏற்பாடுகளை கஜேந்திரன் நாடார் மற்றும் பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
தைப்பூச உற்சவத்தையொட்டி பாலமேடு வேல்முருகன் கோவிலில் பழனி பாதயாத்திரை குழு சார்பில் சாமியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட சாமியார்களுக்கு குருநாதர் கஜேந்திரன், கண்ணன் ஆகியோர் அன்னதானம் வழங்கினர். முன்னதாக கோவிலில் பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சாதுக்களுக்கு வேட்டி வழங்கப்பட்டு அன்னதானம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை கஜேந்திரன் நாடார் மற்றும் பழனி பாதயாத்திரை குழுவினர் செய்திருந்தனர்.
Next Story






