search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தகத்திருவிழாவில் 20 அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் நன்கொடை
    X

    புத்தகத்திருவிழாவில் 20 அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் நன்கொடை

    • சிவகங்கை புத்தகத்திருவிழாவில் 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் நன்கொடை கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
    • சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 27-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை புத்தக திருவிழா மன்னர் மேல்நி லைப்பள்ளியில் கடந்த 27-ந் தேதி முதல் நடந்து வருகிறது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    புத்தகத்திருவிழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக பெருந்திரள் வாசிப்பு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களின் கருத்துரை நிகழ்ச்சிகள், மாயாஜாலக் காட்சிகள் நடந்தன.

    இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணை யாகவும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கும், முதியவர்களின் மன அமைதியை சீராக வைத்துக் கொள்வதற்கும் புத்தகங்கள் மற்றும் நூலகங்கள் அடிப்படையாக அமைகிறது. அதனை கருத்தில் கொண்டு, இந்த புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி, அந்த புத்தகங்களை தங்களுக்கு விருப்பமுள்ள நூலகங்களுக்கு வழங்க முன்வரலாம்.

    தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நூலகங்களை தத்தெடுத்தும், பல்வேறு வகையான புத்தகங்களை கிராம நூலகங்கள் மற்றும் பள்ளி நூலகங்களுக்கு வழங்கியும், இந்த புத்தகத்திருவிழாவிற்கு சிறப்பு சேர்த்து வருகின்றனர்.

    தன்னார்வலர்கள் பங்களிப்பை அளிக்கும் வகையில், அரசு பள்ளியில் படித்து மருத்துவரான தேவ கோட்டை செந்தில் மருத்து வமனை நிறுவன தலைவர் சிவக்குமார் சார்பில் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 20 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை இந்தநிகழ்ச்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் நன்கொடையாக வழங்கினர்.

    இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் தாமாகவே முன்வந்து தங்களது பங்களிப்பையும் அளிக்கும் வகையில், இந்த புத்தக திருவிழாவின் மூலம் பல்வேறு நூல்களை நூல கங்களுக்கும், பள்ளி களுக்கும் வழங்கி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், நூலகங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்த தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வந்து, சிவகங்கையில் நடைபெறும் புத்தகத்திரு விழாவில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×