என் மலர்
நீங்கள் தேடியது "uterus"
- நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுகள் ஜீரணமாகி, அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் தனியாக பிரிக்கப்படுகிறது.
- பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருக்குமே பொதுவாக பாக்டீரியாக்கள் என்பது குடல், வாய் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருக்கிறது.
நமது உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று நல்ல பாக்டீரியாக்கள். இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் நமது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. நமது உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை இந்த நல்ல பாக்டீரியாக்கள் கட்டுப்படுத்தி அழிக்கின்றன. நமது உடலானது இயற்கையான முறையில் இயங்குவதற்கும் நல்ல பாக்டீரியாக்கள் மிகவும் உதவுகின்றன.
உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் உணவு பழக்க வழக்கம்:
நம்முடைய அன்றாட வாழ்க்கையானது மிகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கு குடலில் உள்ள இந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் காரணமாக அமைகின்றன. அதனால் தான் விஞ்ஞானிகள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளிலும், நமது குடலில் உள்ள பாக்டீரியாக்கள், நல்ல பாக்டீரியாக்களாக இருக்க வேண்டும், குடல் பாக்டீரியா தான் நமது ஆரோக்கியத்துக்கான அடிப்படை என்று ஏற்கனவே கண்டுபிடித்துள்ளார்கள்.
ஏனென்றால் நாம் தினமும் உட்கொள்கின்ற உணவுகள் தான் நமது உடலுக்கான ஆரோக்கியம் மற்றும் உடலின் நன்மை, தீமை ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைகிறது.
இன்றைக்கு நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுகள் ஜீரணமாகி, அதில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் தனியாக பிரிக்கப்படுகிறது. அதில் இருக்கும் புரதம் தனியாக பிரிக்கப்படுகிறது. மேலும் அமினோ அமிலம் தனியாக பிரிக்கப்பட்டு உறிஞ்சப்படுகிறது. உணவில் உள்ள கொழுப்பும் தனியாக பிரிக்கப்படுகிறது.
இவ்வாறு நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், அமினோ அமிலம், கொழுப்பு ஆகியவை அதில் இருந்து பிரிக்கப்பட்டு அவை நமது உடலில் சேரும் வகையில் குடல் மூலம் உறிஞ்சப்படுவது தான் நமது உடலுக்கு மிகவும் தேவையான முக்கியமான செயலாகும். இந்த வகையில் நமது உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் முதல் முக்கியமான விஷயங்களாக, நம்முடைய உணவு பழக்க வழக்க முறைகளே அமைகிறது. நிறைய கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிட்டால் நீரிழிவு பாதிப்பு வருகிறது. உப்பு நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
அதேபோல் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட்டால் நமது உடலிலும் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது. இதெல்லாம் அடிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி என்றால் நமது உணவு பழக்க வழக்க முறைகளால் பலவிதமான பாதிப்புகளையும் நமது உடல் எதிர்நோக்குகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள்:
இப்படிப்பட்ட நிலையில் நமது குடலின் ஆரோக்கியம் ரொம்ப ரொம்ப முக்கியம் என்று மருத்துவர்கள் எதற்காக சொல்கிறார்கள் என்றால், இந்த குடல் பகுதியில் இருக்கின்ற சில கெட்ட பாக்டீரியாக்கள் தான் நமக்கு ஏற்படும் பலவிதமான வியாதிகளுக்கான அடிப்படையாக அமைகிறது. அதே நேரத்தில் இந்த குடல் பகுதியில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்கள் தான் பொதுவாக நமது உடலுக்கு பாதுகாப்பை கொடுக்கக்கூடியது ஆகும்.
நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும், குறிப்பாக வெளியில் தெரிகிற உறுப்புகள் எல்லாமே அன்றாட சூழ்நிலையில் பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடுகிறது. அப்படி இருக்கும்போது நமது உடலை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகள் இயற்கையாகவே இருக்க வேண்டும். உதாரணத்துக்கு நமது உடலின் தோல் பகுதியை எடுத்துக் கொண்டால், அதில் தோல் பகுதியை பாதுகாக்கக்கூடிய பாக்டீரியாக்கள் நிறைய இருக்கிறது. இதில் நிறைய பாக்டீரியாக்கள் இழப்பு ஏற்படும் போது தான் நமக்கு நோய் தொற்றுக்கள் ஏற்படுகிறது. அதேபோல் தான் நமது குடல் பகுதியில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் பலவிதமான நோய் தடுப்பு முறைகளுக்கான அடிப்படையாக அமைகிறது.
நமது உடலில் மட்டுமல்ல, பெண்ணுறுப்புகளிலும் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முக்கியமான பல நோய் தடுப்புகளுக்கு வழிமுறையாக அமைகிறது. இதேபோல் நமது வாயில் உள்ள பாக்டீரியாக்களும் நோய்களை தடுக்க பயன்படுகிறது. இதேபோல் நமது உடலில் உள்ள எல்லா திறந்த வெளி உறுப்பு பகுதிகளிலும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன.
நமது உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் இருந்து உள் நுழைவு பகுதிகளாக இருக்கும் வாய், கண், மூக்கு, காது, யோனிப்பகுதி, சிறுநீர்க்குழாய் ஆகிய எல்லா பகுதிகளிலுமே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அந்த பாக்டீரியாக்கள் நமது உடலுக்கு ரொம்ப ரொம்ப தேவையானது.

டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
பெண்களின் கர்ப்பப்பைக்குள் தொற்றுக்கள் செல்வதை தடுக்கும் பாக்டீரியாக்கள்:
ஏனென்றால் நமது உடலில் நோயை உருவாக்குகிற பல பாக்டீரியாக்கள் வெளியே இருக்கிறது. அந்த பாக்டீரியாக்கள் நமது உடலில் உள்ளே நுழைவதற்கு முதல் தடுப்பு புள்ளியே நமது உடல் உறுப்புகளின் நுழைவு பகுதிகளில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான். இந்த நல்ல பாக்டீரியாக்கள் அனைத்தும் நோய்க்கிருமிகளிடம் இருந்து நமது உடலுக்கு பாதுகாப்பை கொடுக்கின்றன.
பெண்கள் மற்றும் ஆண்கள் என எல்லோருக்குமே பொதுவாக பாக்டீரியாக்கள் என்பது குடல், வாய் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதற்காகத்தான் எப்போதும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். நமது வாய் பகுதியில் ஆரோக்கியமற்ற கெட்ட பாக்டீரியா வரக்கூடாது என்பதற்காகத் தான் தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதேபோல் பெண்களின் பெண் உறுப்புகளில் இருக்கிற சில நல்ல பாக்டீரியாக்கள் அவர்களின் ஆரோக்கியத்துக்கு ரொம்ப முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. அதாவது பெண்களின் கர்ப்பப்பைக்குள் செல்கிற எந்தவொரு தொற்றுக்களையும் உள்ளே செல்லாமல் தடுப்பதற்கு இந்த நல்ல பாக்டீரியாக்கள் முக்கியமான வேலைகளை செய்கிறது.
அது என்ன வேலைகளை செய்கிறது என்று பார்த்தால், பெண்ணுறுப்பில் உள்ள யோனி என்கிற குழாயில் தான் கர்ப்பப்பையின் வாய் திறக்கும். யோனிப்பகுதி குழாயின் மறுபுறமானது நமது உடலின் வெளிப்புற பகுதியில் திறக்கும். இந்த அமைப்புகள் இப்படி இருக்கும் நிலையில் கர்ப்பப்பை நேரடியாக உடலின் வெளிப்புற பகுதியில் திறப்பது கிடையாது.
யோனிப்பகுதியை பாதுகாக்கும் அமிலத் தன்மை நிறைந்த பாக்டீரியாக்கள்:
பெண்கள் நிறைய பேருக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் ஏற்படும். என்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்கள் பலரும் இதை கேட்பார்கள். 'டாக்டர் கர்ப்பப்பையில் நோயை உருவாக்குகின்ற தொற்றுகள் கர்ப்பப்பைக்குள் தானாகவே போய்விடுமா?' என்பார்கள்.
கண்டிப்பாக அப்படி தொற்றுக்கள் கர்ப்பப்பைக்குள் செல்ல முடியாது. ஏனென்றால் யோனி குழாயில் உள்ள பாதுகாப்பு அம்சமானது, எந்தவித நோய் தொற்றுக்களுமே கர்ப்பப்பையின் உள்ளே செல்ல விடாமல் தடுக்கும். இந்த யோனி பகுதியில் இருக்கிற நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்குகிற சில பாதுகாப்பு விஷயங்கள் தான் இந்த நோய் தாக்கும் கிருமிகள் நமது கர்ப்பப்பைக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. நாம் ஆரோக்கியமாக இருக்க அந்த நல்ல பாக்டீரியாக்கள் தான் முக்கியம்.
அதனால் தான் யோனி பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் எப்போதுமே அமிலத்தன்மை பி.எச். நிறைந்த பாக்டீரியாக்களாக இருக்கும். அதன் அமிலத்தன்மையானது 4.5 என்ற அளவில் பராமரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த அமிலத்தன்மை பி.எச். அளவானது மாறுபட்டு காரத்தன்மை பி.எச். உருவானால் தொற்றுகள் பரவலாம்.
அதனால் தான் இந்த யோனிப்பகுதியில் உள்ள பாக்டீரியாவின் அமிலத்தன்மை பி.எச். அளவை மிகவும் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். நமது உடலில் எப்போதும் இயற்கையாகவே நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இதனை லாக்டோபேசிலிஸ் என்று சொல்வோம். லாக்டோபேசிலிசில் கிரிஸ்பேக்டர்ஸ், கெசேரி, ஜென்சினி ஆகியவை மிகவும் பொதுவான லாக்டோபேசிலிஸ் ஆகும். இதனுடைய தன்மையே இந்த அமிலத்தன்மை பி.எச். அளவை 3.5 முதல் 4.5 ஆக வைத்துக் கொள்ளும். அப்படி இருந்தால் தான் எந்தவித தொற்றுக்களும் உள்ளே வர முடியாது.
நமது கர்ப்பப்பையின் பி.எச். ஆல்கலைன், இது கர்ப்ப வாயில் இருக்கும் பி.எச். ஆகும். இதன் அளவானது 7.4 ஆகும். நமது உடலில் உள்ள எல்லா திரவங்களும் 7.4 என்ற அளவில் தான் இருக்க வேண்டும். நமது உடலில் உள்ள ரத்தமே ஒரு ஆல்கலைன் தான். அதுவும் 7.4 என்ற அளவில் தான் இருக்கும். அதனால் தான் பல நேரங்களில் பல தொற்றுக்கள் வெளியில் இருந்து உள்ளே வராமல் தடுப்பதற்கு அமிலத்தன்மை அதிக மாக இருக்கின்ற பி.எச்., லாக்டோபேசிலிசில் உருவாகிறது. எனவே பெண்களை பொருத்த வரைக்கும் இந்த கர்ப்ப்பப்பை வாயில் இந்த பி.எச்.ஐ பராமரிப்பது இந்த லாக்டோபேசிலிஸ் தான். இதனால் கர்ப்பப்பையானது நோய் தொற்றுக்கள் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் இந்த நல்ல பாக்டீரியா பழுதானாலோ அல்லது அழிக்கப்பட்டாலோ அல்லது குறைவானாலோ நமது உடலில் நோய்க்கிருமிகள் எளிதாக தொற்றிக்கொள்ளும். அது பல்வேறு பிரச்சி னைகளையும் ஏற்படுத்தும். நமது உடலில் அந்த நல்ல பாக்டீரியாக்கள் அழிவதற்கான காரணங்கள் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.
- சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
- குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இதுபோன்ற சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.
காஞ்சிபுரம்:
கர்ப்பப்பை பிரச்சினைகளால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத நிலை வரும்போது செயற்கைமுறையில் கருத்தரித்தல், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுதல், குழந்தையை தத்தெடுத்தல் போன்ற ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.
நவீன மருத்துவத்தில் இதயம், கல்லீரம், சிறுநீரகம் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகளை போல் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்தும் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.
பெரும்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தமிழகத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரும், ஆந்திராவை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் கருவுற முடியாததால் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிறவியிலேயே இருவருக்கும் கர்ப்பப்பை இல்லாமல் போனதால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததை விளக்கி இருக்கிறார்கள்.
வாடகைத்தாய் மூலம் முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் உறுப்புமாற்று சிகிச்சை முறையில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ள விரும்பி இருக்கிறார்கள்.
அந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இல்லை. ஆனால் கருமுட்டைகள் உருவாகும் ஓவரி மற்றும் கருமுட்டைகளை கொண்டு செல்லும் குழாய் ஆகியவை நல்ல நிலையில் உள்ளன. இதையடுத்து கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பெண்ணுக்கு அவரது தாயும், மற்றொருவருக்கு அவரது அத்தையும் கர்ப்பப்பை தானம் கொடுக்க முன்வந்தனர்.
அவர்கள் இருவரும் 54 மற்றும் 56 வயதுடையவர்கள் மாதவிடாய் நின்று போனவர்கள். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனர். இதனால் அவர்கள் கர்ப்பப்பையை எடுக்க சோதனைகள் நடத்தப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆபரேசன் தேதி குறிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட நாளில் தானம் செய்யும் பெண்ணிடம் இருந்து கர்ப்பப்பை அகற்றப்பட்டு இரண்டு பெண்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை 16 மணிநேரம் நீடித்துள்ளது.
இந்த சிகிச்சையில் புகழ்பெற்ற செக் குடியரசு நாட்டை சேர்ந்த டாக்டர் ஜிரிபு ரோனெக் என்பவர் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
இந்த மாதிரி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது சில நேரங்களில் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு உறுப்பை ஏற்றுக் கொள்ளாது. அதை தவிர்க்க விலை உயர்ந்த ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும்.
அந்த வகையில் இந்த இரு பெண்களும் 3 மாதங்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். வருகிற மே மாதம் செயற்கை கருவூட்டல் முறையில் கருமுட்டையை உருவாக்கி கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டு குழந்தை வளர்ச்சி கண்காணிக்கப்படும். பின்னர் ஆபரேசன் மூலம் பிரசவம் செய்யப்படும்.
இந்த மாதிரி கர்ப்பப்பை புதிதாக பொருத்தப்படுவது 5 வருடங்கள் வரை கருவுறும் தன்மை பெற்றிருக்கும். இந்த கால கட்டத்துக்குள் 2 அல்லது 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் முதல் முறையாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை மிகப்பெரிய வரப்பிரசாதம்.
கருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது கணைச்சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெயை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்துகொடுக்கப்படுகிறது.
இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச்சூடாக மாறும். இதனால் ரத்தசோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோயிற்காக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.

நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப்பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.
முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய்சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும். தேனும் தினை மாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.
நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக்கட்டி, கருப்பைக்கட்டி போன்றவைகள் உருவாகி மாத விடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
உடல்சூடு, இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின்மை, அடிக்கடி கோபம், சலிப்பு, மறதி, மனஉளைச்சல், உடல் வலி போன்ற பிரச்சனைகள் தாக்கும். சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உண்டாகும். உடலுறவில் பிரச்சனை ஏற்படும். எலும்பு தேய்மானம் மற்றும் முதுகெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்தரவுகளும் வரும். பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுக்கும் போது இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் கருப்பையை எடுக்க நேரும்போது சினை முட்டைப் பையை விட்டு விட்டால் இப்பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர்.
ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினை முட்டைப் பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். ரத்தக் குழாயில் ரத்தம் உறைதல் மார்பக புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப்பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது.
பாதுகாப்பு முறை: அதிகமாக உதிரம் போதல் வலி சிறிய கட்டிகள் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம். இது போன்ற பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம்.
பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது. நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும். கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்சனைகளும் இருக்கும்.
கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். 24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப் பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.






