search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali"

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன.
    • தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சி பகுதியில் தீபாவளி பண்டிகையொட்டி இளைஞர்கள் முதல் பெரியவர்கள், சிறுமிகள் என பலரும் பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். நகராட்சி பகுதியில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட குப்பைகள் சுமார் 20 டன் அளவுக்கு நகராட்சி தூய்மை பணி யா ளர்கள் அகற்றினர். மேலும் மாரி யம்மன் கோவில் பண்டிகையை யொட்டி ஏற்பட்ட குப்பைக ளை யும் அகற்றினர்.

    • அரசு வகுத்துள்ள நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
    • குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் ஆங்காங்கேய பொதுமக்கள் ஒன்று திரண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் சரவெடிகள் உள்ளிட்ட வைகளை வெடிக்க கூடாது.

    அரசு வகுத்துள்ள நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

    கட்டுப்பாடுகளை மீறுவது மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். என அரசு கட்டுப்பாடுகள் விதித்தி ருந்தது இந்த கட்டுப்பாடுகளை மீறியும் அரசு வகுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீதும் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அரசு விதிமுறையை மீறி பட்டாசுகள் வடித்த 17 பேரும் இது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.
    • 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

    சென்னிமலை:

    தீபாவளி என்றாலே அனைவரது நினைவிலும் முன் நிற்பது பட்டாசு தான். தீபாவளி பட்டாசுகள் பல கோடிகள் வரை விற்கப்படுகின்றன. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எதற்காக கரியாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு.

    ஆனால் பணம் போனால் போகிறது என்று ரோடு நிறைய குப்பைகள் நிறைய பட்டாசுகளை வெடிப்பவர்களும் ஒரு ரகம். தனக்கென இல்லாமல் மற்றவர்களுக்குக்காக தனது மகிழ்ச்சியை தியாகம் செய்து வாழும் மக்களை காண்பதே அரிது.

    மனிதர்களுக்கு உதவிடும் தன்மையே இருந்து கொண்டிருக்கிறது என்று அனைவரும் நினைக்கும் இந்த வேளையில் 5 அறிவு உயிரினங்களை கூட தொல்லை செய்யக்கூடாது என்று பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களின் உள்ளம் நிச்சயமாக நல் உள்ளம் தான்.

    அப்படி நல் உள்ளம் படைத்தவர்கள் சென்னிமலை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்து உட்பட்ட வி.மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரை வழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, கொங்கு நகர், கருங்கங்காட்டு வலசு ஆகிய கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நேற்று தீபாவளி பண்டிகைக்கு வெடி என்பது அறவே வெடிக்காமல் தீபாவளி கொண்டாடினர்.

    இப்படிதான் கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளியை இந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான். இந்த வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளது.

    அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்லும். அமைதியை தேடி வரும் இங்கு வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்க கூடாது என்பதற்காக இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இன்றும் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். ஆனால் வெள்ளோடு சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் புத்தாடை அணிந்து இனிப்பு வழங்கி பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடினர்.

    சிறுவர்கள் மகிழ்ச்சிக்காக கம்பி மத்தாப்பூ, தரைச க்கரம், புஸ்வானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்தனர். இப்பகுதியில் பட்டாசு வெடிக்க கூடாது என வனத்துறை சார்பாக கிராம மக்களுக்கு வேண்டு கோளும் விடப்பட்டுருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
    • ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியை முன்னிட்டு நேற்று தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.

    இதனையொட்டி சர்வ பூ பால வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். மூலவருக்கு அதிரசம் படையிலப்பட்டது.

    நேற்று அவரவர்கள் வீட்டிலேயே தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் தங்க வைக்கப்படாமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,807 பேர் தரிசனம் செய்தனர். 21, 974 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இரவில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. பகலில் இதமான தட்ப வெப்பநிலை உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்று மாசு உள்ளிட்ட காரணங்களாக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு அறிவித்தது.
    • அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு.

    தமிழகத்தில் நேற்று பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    காற்று மாசு உள்ளிட்ட காரணங்களுக்காக பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கி அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவாகியுள்ளது.

    அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • அரசு அனுமதித்த நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.
    • காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகள் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

    குறிப்பாக சென்னையில் காற்று மாசு அளவு வழக்கத்தைவிட மோசமாக உள்ளது. சென்னையில் நேற்று காற்று மாசு 170ஆக இருந்த நிலையில், விடிய வடிய வாணவேடிக்கை நடந்ததால் காற்றின் தரம் மேலும் மோசமடைந்து தரக்குறியீடு 200ஐ கடந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    மேலும், அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301ஆகவும், அரும்பாக்கத்தில் 260ஆகவும், ஆலந்தூரில் 256ஆகவும், ராயபுரத்தில் 227ஆகவும் பதிவாகியுள்ளது.

    பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.

    காற்றில் பிஎம் 2.5, பிஎம் 10, என்ஒ2, எஸ்02 உள்ளிட்ட வகை மாசு அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • கோயிலில் வைக்கப்பட்ட ஓலைகளில் தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம்.

    சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து, கோயிலை சுற்றி ஓலைகள் கட்டப்பட்டு இருந்தது. ஓலையில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கப்படுகிறது.
    • மணலியில் காற்று மாசு அளவு 224 ஆக பதிவு.

    சென்னையில் இன்று (நவம்பர் 12) மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு 178 குறியீடாக பதிவாகி இருக்கிறது. நவம்பர் 10-ம் தேதி காற்று மாசு அளவு 83-ஆக இருந்த நிலையில், நேற்றைய காற்று மாசு அளவு 115 ஆகவும், இன்று 178 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசு வெடித்து வருவதால், காற்று மாசு அதிகரித்து இருக்கும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் தெரிவித்து உள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு பதிவு செய்யப்பட்டதில், மணலியில் அதிகபட்சமாக காற்று மாசின் அளவு 224 ஆக பதிவாகி இருக்கிறது.

    இதே போன்று பெருங்குடியில் காற்று மாசு அளவு 221 ஆகவும், ஆலந்தூரில் 188 ஆகவும், வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 ஆகவும் பதிவாகி உள்ளது. சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு அளவு 170-க்கும் அதிகமாகவே பதிவாகி இருக்கிறது.

    • புகைப்படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் இடம் கோயிலுக்கு நிகரான ஒன்று.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார்.

    அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ உடை அணிந்திருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "நீங்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு பண்டிகையே. நான் பிரதமர் மற்றும் முதலமைச்சர் போன்ற பதவிகளில் இல்லாத சமயத்திலும், தீபாவளியன்று ராணுவ வீரரர்களை சந்தித்து இருக்கிறேன்."

    "ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் இடம் கோயிலுக்கு நிகரான ஒன்று. நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு பூஜைகளிலும், நமது எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கான பிரார்த்தனை நடைபெறுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு விளக்கு, அவர்களுக்காக ஏற்றப்படுகிறது," என்று தெரிவித்தார்.

    • கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க பட்டாசுகள் வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தீபாவளி தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர தடை செய்யப்பட்ட, ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி சென்னையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நேற்றிரவு முதல் தற்போது வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்ததாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    • தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    • ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக , வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தீபாவளி வாழ்த்துகள் எனக்கூறிய அவர், தனது குழந்தைகளும் தீபாவளி வாழ்த்து கூறுவதை பதிவிட்டுள்ளார்.

    • நாட்டை காக்கும் ராணுவ வீரர்கள் எல்லையில் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    ஸ்ரீநகர்:

    நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பட்டாசு வெடித்தும் தீபாவளி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 76-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், பணிக்கு இடையே பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். அனைவரும் ஒரு குடும்பம் போன்று தீபாவளியைக் கொண்டாடுவதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

    சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டும் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

    ×